முகப்புதொடக்கம்
22 மாறனலங்காரவரலாறு

சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள். இவரைப்போலவே இவர் வமிசத்தோரும் சிறந்த வித்வான்களாயும் வைணவர்களாயுமிருந்து தமிழையபி விருத்தி செய்தார்கள். மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரம்ம ஸ்ரீ மஹாமஹோபாத்யாய சாமிநாதையரவர்கள், ஸ்ரீ-உ வே.ரா.இராகவையங்காரவர்கள் முதலியோருக்கு அரும்பெறற்றமிழ் நூல்களருளிய குடும்பம் இதுவே. இக்குடும்பத்தினர் ஏடுகளே திருக்கோவையாருரையாசிரியர் பேராசிரியரென்றும், அச்சிட்ட தொல்காப்பியச்செய்யுளியலுரை முதலியவை பேராசிரியரது ; நச்சினார்க்கினியரதன் றென்றும், பரிபாடலுரையாசிரியர் பரிமேலழகர் என்றும் அறியுமாறு அருமையான பல விஷயங்களைத் தெரிவித்தன. இக்குடும்பத்தார் காப்பாற்றி வைத்த ஏடுகளின் பெருமை பிரம்ம ஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள் ஸ்ரீ.உ.வே.ராகவையங்காரவர்கள் முதலியோருக்கே தெரியும். இவ்வமிசத்தவர் வைணவபரமாய் எத்துணையோ தமிழ்நூல்கள் செய்திருக்கிறார்கள். தமிழுரை செய்திருக்கிறார்கள். வடமலையப்ப அரசரின் ஸமஸ்தானவித்வான் சிறியகாரிரத்நகவிராயர் இவ்வம்சத்தவர். சாபா நுக்ரகசக்தியுடன் கவிபாடத் தகுந்த புலவர் இவ்வம்சத்தி லநேகரிருந்திருக்கின்றனர். குமரகுருபர சுவாமிகள் வம்சபரம்பரையோரில் ஆழ்வார் திருநகரிக்கிளையினர் அநேகர் இவ்வம்சத்தாரிடம் பாடங்கேட்டிருக்கிறார்களென்று தெரிகிறது. இம்மாறனலங்கார உரையாசிரியர் விஷயமான சிறப்புப் பாயிரச் செய்யுளையெடுத்துக் காட்டி இதனுடன் நிறுத்துகிறேன்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்நகவிராயன் பேரைவரோதயனே.
A.M. சடகோபராமாநுஜாசார்யன்
(நேஷநல்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்,
திருச்சிராப்பள்ளி.)
25-5-1913.
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்