முகப்பு |
உலோச்சனார் |
175. நெய்தல் |
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி, |
||
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, |
||
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் |
||
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு |
||
இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று, |
||
பிறர்பிறர் அறியக் கூறல் |
||
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே? |
உரை | |
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன். |
177. நெய்தல் |
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, |
||
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; |
||
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை |
||
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் |
||
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப் |
||
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் |
||
தணப்பு அருங் காமம் தண்டியோரே? |
உரை | |
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன் |
205. நெய்தல் |
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க |
||
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு, |
||
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி, |
||
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப, |
||
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்; |
||
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என் |
||
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே? |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன் |
248. நெய்தல் |
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு |
||
உறுக என்ற நாளே குறுகி, |
||
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல் |
||
ஆடு அரை புதையக் கோடை இட்ட |
||
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை |
||
குறிய ஆகும் துறைவனைப் |
||
பெரிய கூறி யாய் அறிந்தனளே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சன் |