முகப்பு |
ஞாழல் |
50. மருதம் |
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் |
||
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் |
||
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து |
||
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப் |
||
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே. |
உரை | |
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார் |
81. குறிஞ்சி |
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி, |
||
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப் |
||
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; |
||
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்- |
||
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் |
||
கடலும் கானலும் தோன்றும் |
||
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. |
உரை | |
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன் |
310. நெய்தல் |
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; |
||
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும், |
||
நம்மே போலும் மம்மர்த்து ஆகி, |
||
எல்லை கழியப் புல்லென்றன்றே; |
||
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை |
||
தண்ணிய கமழும் ஞாழல் |
||
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே. |
உரை | |
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன் |
318. நெய்தல் |
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், |
||
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய், |
||
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் |
||
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று |
||
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் |
||
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள் |
||
பிழையா வஞ்சினம் செய்த |
||
களவனும், கடவனும், புணைவனும், தானே. |
உரை | |
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
328. நெய்தல் |
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி |
||
அலவன் சிறு மனை சிதைய, புணரி |
||
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் |
||
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே, |
||
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் |
||
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் |
||
புலி நோக்கு உறழ் நிலை கண்ட |
||
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. |
உரை | |
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர் |
397. நெய்தல் |
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ |
||
நெய்தல் மா மலர்ப் பெய்த போல |
||
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
||
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, |
||
'அன்னாய்!' என்னும் குழவி போல, |
||
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், |
||
நின் வரைப்பினள் என் தோழி; |
||
தன் உறு விழுமம் களைஞரோ இலளே. |
உரை | |
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன் |