முகப்பு |
மல்லிகை (குளவி) |
56. பாலை |
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் |
||
குளவி மொய்த்த அழுகற் சில் நீர் |
||
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர், |
||
வருகதில் அம்ம, தானே; |
||
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே! |
உரை | |
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார் |
59. பாலை |
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் |
||
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் |
||
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் |
||
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும், |
||
சுரம் பல விலங்கிய அரும் பொருள் |
||
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே. |
உரை | |
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார் |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
136. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக் |
||
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை |
||
குளகு மென்று ஆள் மதம் போலப் |
||
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |