முகப்பு |
நெல் (ஐவனம்) |
53. மருதம் |
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில் |
||
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், |
||
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் |
||
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன, |
||
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, |
||
நேர் இறை முன்கை பற்றி, |
||
சூரரமகளிரோடு உற்ற சூளே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
210. முல்லை |
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் |
||
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி |
||
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு |
||
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி |
||
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு |
||
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே. |
உரை | |
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
238. மருதம் |
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை |
||
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
தொண்டி அன்ன என் நலம் தந்து, |
||
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே. |
உரை | |
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன் |
269. நெய்தல் |
சேயாறு சென்று, துனைபரி அசாவாது, |
||
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல- |
||
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் |
||
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் |
||
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய |
||
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், |
||
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, |
||
'இனி வரின் எளியள்' என்னும் தூதே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார் |
277. பாலை |
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை, |
||
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது |
||
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி, |
||
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் |
||
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே- |
||
'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, |
||
எக் கால் வருவது?' என்றி; |
||
அக் கால் வருவர், எம் காதலோரே. |
உரை | |
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார் |