முகப்பு |
பாம்பு (அரா, அரவு) |
35. மருதம் |
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, |
||
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன |
||
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ |
||
நுண் உறை அழிதுளி தலைஇய |
||
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
43. பாலை |
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே; |
||
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே: |
||
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல், |
||
நல்அராக் கதுவியாங்கு, என் |
||
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார் |
119. குறிஞ்சி |
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை |
||
கான யானை அணங்கியா அங்கு- |
||
இளையள், முளை வாள் எயிற்றள், |
||
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார் |
134. குறிஞ்சி |
அம்ம வாழி-தோழி!-நம்மொடு |
||
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல- |
||
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப் |
||
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் |
||
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, |
||
நிலம் கொள் பாம்பின், இழிதரும் |
||
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே. |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன் |
154. பாலை |
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின் |
||
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, |
||
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, |
||
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை |
||
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் |
||
தயங்க இருந்து, புலம்பக் கூஉம் |
||
அருஞ் சுர வைப்பின் கானம் |
||
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன் |
158. குறிஞ்சி |
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் |
||
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக் |
||
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! |
||
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை |
||
இமயமும் துளக்கும் பண்பினை; |
||
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே? |
உரை | |
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார். |
185. குறிஞ்சி |
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி, |
||
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து, |
||
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச் |
||
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப் |
||
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி, |
||
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் |
||
கல்மிசைக் கவியும் நாடற்கு, என் |
||
நல் மா மேனி அழி படர் நிலையே? |
உரை | |
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
190. முல்லை |
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
||
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர் |
||
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி |
||
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய |
||
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள், |
||
நல் ஏறு இயங்குதொறு இயம்பும் |
||
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன். |
235. பாலை |
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின் |
||
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் |
||
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி |
||
மரையினம் ஆரும் முன்றில் |
||
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. |
உரை | |
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன். |
239. குறிஞ்சி |
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; |
||
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச் |
||
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் |
||
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி |
||
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் |
||
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே. |
உரை | |
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன் |
268. நெய்தல் |
'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்; |
||
'வருவிரோ? என வினவலும் வினவாம்; |
||
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின் |
||
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு |
||
நடு நாள் என்னார், வந்து, |
||
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன் |
354. மருதம் |
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; |
||
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்; |
||
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ- |
||
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் |
||
கடும் பாம்பு வழங்கும் தெருவில் |
||
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே? |
உரை | |
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான் |
391. முல்லை |
உவரி ஒருத்தல் உழாஅது மடியப் |
||
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், |
||
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, |
||
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; |
||
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் |
||
கையற வந்த பையுள் மாலை, |
||
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை |
||
தாஅம்நீர் நனந்தலை புலம்பக் |
||
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே! |
உரை | |
பிரிவிடை, 'பருவ வரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார் |