பதிற்றுக்கை - பத்துக்கை | 3-40 |
பதின்மரும் இருவரும் - பன்னிரண்டாதித்தரும் | 8-4 |
பதுமத்துப்பாயல் - தாமரைப்பூப் பாயல் | 5-49 |
பதுமம் - தாமரைப்பூ | 8-115 |
பந்து - ஒரு விளையாட்டுக்கருவி | 10-107 |
பயந்த ஞான்றே - பெற்றபொழுதே | 5-50 |
பயந்தோர் - பெற்றார் | 5-49 |
பயந்தோள் - தாய் | 3-16 |
பயம் - பயன் | 11-34 |
பயம்பு - பள்ளம் | 7-15 |
பயின் - பிசின் | 10-54 |
பரத்தை - பரத்தைமை | 9-18 |
பரத்தந்து - பரக்க | 7-39 |
பரந்தென - பரவியதென்று | 7-28 |
பரவுதும் - வேண்டிக்கொள்வேம் | 2-75 |
பரி - குதிரை | 11-60 |
" - செலவு | 5-22 |
பரிந்து - இரங்கி | 7-57 |
பரிசில் வாழ்நர் - இரவலர் | 7-6 |
பரிபாடல் - ஒருவகைப் பாடல் | 11-137 |
பரிப்புரவி - செலவினையுடைய குதிரை | 9-51 |
பரிய - வருந்த | 8-129 |
பரியூஉ - அறுத்து | 7-72 |
பருக்கோட்டியாழ் - பரிய தண்டினையுடைய யாழ் | 10-56 |
பருதி - சக்கரம் | 3-89 |
பருமணல் - பரிய மணல் | 10-4 |
பருவத்து - செவ்வியில் | 8-85 |
பரூஉக்கரை - பரியகரை | 10-26 |
பலர்புகழ்குன்று - மேருமலை | 4-24 |
பலவடுக்கல் - பலவாக அடுக்கப்பட்ட | 3-44 |
பல்சனம் - பலமாந்தர் | 10-59 |
பல்லவம் - தளிர் | 19-68 |
பவளவளை - பவளத்தானாகிய வளையல் | 11-101 |
பழனம் - வயல் | 7-34 |
பழிச்சுதல் - புகழ்தல் | 10-116 |
பளிதம் - கருப்பூரம் | 1-82 |
பறவாப்பூவை - காயா | 3-73 |
பறியா - பறிக்கப்படாத | 2-43 |
பற்றாகின்று - இடமாகாநின்றது | 8-10 |
பனித்து - நீரைத்துளித்து | 6-85 |
பனிநீர் - பன்னீர் | 10-123 |
பனியாய் - அஞ்சாய் | 6-81 |
பனைக்கொடியோன் - பலதேவன் | 2-22 |
பன்மான் - பலகாலும் | 2-73,
8-85 |
பா | |
பாஅய் - பாய்ந்து | 8-112 |
பாகர் - பாகு | 11-66 |
பாகு - கன்மேந்திரியங்கள் | 3-77 |
பாக்கம் - ஊர் | 7-31 |
பாங்கர் - தோழியர் | 10-23 |
பாங்கு - பக்கம் | 10-41 |
பாடினி - பாடுபவள் | 17-17 |
பாடுவார் - பாணர் | 7-31 |
பாண - பாணனே | 3-86 |
பாணி - காலம் | 8-56;
20-57 |
" - தாளம் | 21-36 |
பாண் - பாணர் | 7-66 |
பாண்டி - எருது; ஆகுபெயராய் வண்டிக்கு ஆயிற்று | 10-16;
20-17 |
பாண்டில் - தாளம் | 14-42 |
பாதிரி - ஒருமரம் | 12-79 |
பாப்புப்பகை - கருடன் | 13-38 |
பாம்பு - இராகு | 11-9 |
பாய் - பரந்த | 5-1 |
பாய்க்குநர் - குத்துவோர் | 12-29 |
பாய்ந்தன்று - பாய்ந்தது | 9-43 |
பார் - உலகம் | 10-67 |
" - பாறைக்கல் | 5-1 |
பாலை - ஒரு பண் | 7-77;
11-127 |
பாவை - பொம்மை | 7-26 |
பாவையர் - மகளிர் | 8-112 |
பாழ் - புருடன் | 3-77 |
பாளை - கமுகுதெங்கு முதலியவற்றின் பாளை | 7-34 |
பாற்கடல் - திருப்பாற்கடல் | 13-26 |
பி | |
பிசிர் - ஊற்றுநீர் | 6-83 |
பிடி - பெண்யானை | 6-20 |
பிணிமுகம் - முருகப்பெருமான் ஏறும் யானை | 5-2 |
பிணை - பாய்மரம் | 10-53 |