பிணியிலி - துணையில்லாதாய் | 20-50 |
பிண்டி - அசோகு | 11-95 |
பிரமம் - பிரமவீணை | 19-40 |
பிருங்கலாதன் - பிரகலாதன் | 4-12 |
பிழை - பொய் | 6-74;
8-103 |
பிழையினை - பிழையுடையை | 12-60 |
பிறக்க - மிகுவிக்க | 21-35 |
பிறங்கல் - கல்; மலை | 19-59 |
பிறவியை - பிறப்பினையுடையை | 5-12 |
பிறழ்ந்து - வழிதவறி | 19-59 |
பிறை - இளந்திங்கள் | 3-52 |
பீ | |
பீடு - பெருமை | 2-11 |
பீலி - தொகை | 5-60 |
பு | |
புகர் - குற்றம் | 1-45 |
புகர்முகம் - யானை | 6-25 |
புகல் - விருப்பம் | 7-77;
19-1 |
புகவரும் - மேற்கோடலரிய | 10-14 |
புகழவை - புகழுடையை |
1-60; 13-41 |
புகை - நறுமணப்புகை | 6-11 |
புக்கற்று - புகுந்தாற் போன்றது | 7-49 |
புக்கு - புகுந்து | 5-1 |
புங்கவம் - காளை | 8-2 |
புடைப்ப - அடிப்ப | 9-40 |
புடைப்பார் - அடிப்பார் | 9-46 |
புட்டகம் - புடைவை | 12-17 |
புணர்த்திய - கூட்டுவித்தற்கு | 7-37 |
புணர்ந்தென - கூடினாற் போன்று | 7-86 |
புணர்ப்பின் - கூட்டத்தையுடைய | 11-81 |
புணர்மார் - புணர்வார் | 11-67 |
புணை - தெப்பம் | 11-108 |
புணையாகிய - தெப்பமாகிய | 6-80 |
புண்மிசைக்கொடியோன் - கருடக்கொடியை உடைய திருமால் |
8-2 |
புதைஇயவளை - பொத்தியவளை | 7-54 |
புதையிருள் - பொருளை மறைக்குமிருள் | 2-22 |
புத்தேளுலகு - தேவருலகம் (ப-தி) | 11-4 |
புந்தி - புதன் | 11-6 |
புரத்தல் - காப்பாற்றுதல் | 4-28 |
புரந்தரன் - இந்திரன் | 5-56 |
புரி - முறுக்கிய | 7-77 |
புரிநூலந்தணர் - பார்ப்பனர் | 11-19 |
புரிந்த - மிகுந்த | 7-51 |
புரிவான் - செய்ய | 10-9 |
புரீஇ - விரும்பி | 15-63 |
புருவத்து - பூர்வத்தில்; பண்டு | 4-22 |
புரை - உயர்வு | 3-46 |
புரைபடல் - வருத்தமுறுதல் | 2-34 |
புரையும் - ஒக்கும் | 2-28 |
புரையோய் - உயர்ந்தோய் | 20-72 |
புரைவது - பொருந்துவது | 6-55 |
புலக்கோல் - அறிவாகிய தராசு (ப-தி) | 6-2 |
புலத்தலில் - ஊடுதலாலே | 9-16 |
புலநா - அறிவுடைய நா | 6-7 |
புலம் - அறிவு; வேதம் | 1-46;
19-86; |
புலம்ப - தனிப்ப | 11-118 |
புலராமகிழ் - கெடாத மகிழ்ச்சி | 8-45 |
புலர்த்தர - உலர்த்த | 11-89 |
புலர்த்தியோய் - உலரச் செய்தோய் | 3-26 |
புலர்வு - வைகறைப்பொழுது | 11-83 |
புவ்வம் - கொப்பூழ் | 15-49 |
புலவரை - அறிவெல்லை | 15-1 |
புலனந்த - வயல்கள் விளைய | 7-9 |
புல்ல - தழுவ | 11-116 |
புள் - கருடன் | 13-4 |
புள்ளிநிலன் - புள்ளியளவிற்றாகிய நிலம் | 2-34 |
புள்ளியன்மா - பறவையின் இயல்பினையுடைய குதிரை | 10-14 |
புள்ளினை - பறவையை யுடையை | 3-16 |
புள்ளேர் - பறவையையொத்த | 11-52 |
புள்ளொடு பெயரிய பொருப்பு - கிரவுஞ்ச மலை | 21-9 |
புனல் - நீர் | 6-3; 6-10 |
புனை - புகழப்படுகின்ற | 4-59 |
புனைந்த - இயற்றிய | 6-8 |
புனைபுணை - கட்டிய தெப்பம் | 6-68 |