பகுதியாக
வெளியிடப்பெற்றது.
பின்
இருநூறு
பாடல்களுக்குரிய
விளக்கவுரை அக் கழகத்தின் சார்பில்
இரண்டாம் பகுதியாக இப்பொழுது
வெளிவருகின்றது.
இவ்விளக்கவுரையில், ஒவ்வொரு
செய்யுளின்
முன்னும்
அதனைப்
பாடிய புலவர்க்கு உரிய ஊரும் பேரும் நாடும் பிற
செய்திகளும்
பற்றிய
வரலாற்றுக்
குறிப்பும்,
பாடப்பட்டோரைப்
பற்றிய
செய்திகளும்
விரித்துரைக்கப்பெற்றுள்ளன. பழைய வுரையுள்ள பாடல்களுக்கு அப்பழைய
வுரையின்
பொழிப்புரையினையே
சிறிதும்
மாற்றாது
கண்ணழித்து
அமைக்கப்பட்ட பதிவுரையொடு சிறப்புரையும் தரப்பட்டுள்ளது. இம்முறை
பழைய வுரையினைப் பயில்வார்க்கு மிகவும் துணை செய்யும் என்பது
உறுதி.
பழையவுரை
யில்லாதனவாகிய
269
முதல்
400
வரையுள்ள
பாடல்களுக்குத் திரு. பிள்ளையவர்கள் தாமே புதியதோர் உரையினை
வரைந்துள்ளார்கள்.
புறநானூற்றின்
பிற்பகுதிக்கு
இவர்கள்
எழுதிய
இப்புதிய
உரை
முற்பகுதிக்கு
அமைந்த
பழையவுரையின்
சொன்னடையினையே பெரிதும் அடியொற்றிச் செல்வது பாராட்டத் தக்கது.
இப் பதிப்பில்
பாடல்தோறும்
உரைப்பகுதியின்
பின்னே
அப்பாடலில்
அமைந்த சுவைநலங்களை விளக்குமுகமாக
உரை
விளக்கங்கள்
தரப்
பெற்றுள்ளன; சங்க நூல்களிலும் பிறநூல்களிலும்
காணப்படும்
ஒப்புமைப்
பகுதிகளும்
வரலாற்றுச்
செய்திகளும்
மேற்கோளாக
எடுத்துக்
காட்டப் பெற்றுள்ளன. டாக்டர் ஐயரவர்கள் பதிப்பில் வெளிவந்த
பாடல்
பகுதிகளிற் சிதைந்து காணப்படும் அடிகளில் சில பழைய ஏடுகளுடன்
ஒப்புநோக்கப்பட்டு ஓரளவு திருத்தம் பெற்றுள்ளன. புறம்: 328, 337, 355,
357, 361, 362, 366, 370 என்னும் எண்ணுள்ள பாடற் பகுதிகளைச் சிறப்பாக
நோக்குக. அரித்துவார மங்கலத்தில் வாழ்ந்த புலமைச் செல்வரும்,
தமிழ்ப்புலவர்களைப் போற்றிப் புகழ்பெற்ற செந்தமிழ்ப்
புரவலரும்
ஆகிய
வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியார் அவர்கள் வைத்திருந்த பழைய
புறநானூற்றுச் சுவடியின்
துணை கொண்டு
பிள்ளையவர்கள்
இப் பதிப்பில்
அமைந்த
செய்யுட்களைத் திருந்திய வடிவில் வெளியிட்டுள்ளார்கள் என
அறிகிறேன். இவ்வுரைப் பதிப்பில், புலவர் பெருமக்களும் அவர்களாற்
பாடப்பெற்ற வள்ளல்களும் வாழ்ந்த ஊர்களைப் பற்றிய செய்திகள்
கல்வெட்டுகளின் துணை கொண்டு உய்த்துணர வைக்கப்பட்டுள்ளன.
இத்தொண்டு தமிழ் நாட்டின் பழைய வரலாற்றினை ஆராய்ந்து காண
விரும்புவார்க்கு மேலும் ஊக்கமளிக்குமென நம்புகிறேன்.
இவ்விளக்கவுரையாசிரியர் சங்கப்புலவர் பெயர்களுட்
சிலவற்றை
உய்த்துணர்ந்தும், பாடவேறுபாடு கண்டும் திருத்தியுள்ளார். அவற்றுட்
சில பின்வருவன-:
|