கருங்குழலாதனார்
|
- கருங்குளவாதனார்
|
புறம்
|
224
|
ஆடுதுறைமாசாத்தனார்
|
- ஆவடுதுறை
மாசாத்தனார்
|
“
|
227
|
தும்பி சொகினனார்
|
- தும்பைச்சொகினனார்
|
“
|
249
|
மாற்பித்தியார்
|
- மாரிப்பித்தியார்
|
“
|
252
|
குளம்பாதாயனார்
|
- குளம்பந்தாயனார்
|
“
|
253
|
வெறிபாடியகாமக்
கண்ணியார்
|
-
வெறிபாடியகாமக்
காணியார்
|
“
|
271
|
அடைநெடுங்கல்வியார்
|
- அண்டர்
நடுங்கல்லினார்
|
“
|
238
|
நெடுங்கழுத்துப்பரணர்
|
- நெடுங்களத்துப்பரணர்
|
“
|
291
|
வெள்ளைமாளர்
|
- வெள்ளைமாறனார்
|
“
|
296
|
ஆலியார்
|
- ஆவியார்
|
“
|
298
|
இவை
அறிஞர்கள் ஆராய்தற்கு உரியன.
செய்யுட் பொருளையுணர்ந்து
இன்புறுதற்கு
அவ்வச்
செய்யுள்
பாடப்பெற்ற செவ்வியினை அறிந்து
கொள்ளுதல்
இன்றியமையாதது.
அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும்
புலவருள்ளத்திலிருந்து
அப்பாடல் தோன்றுதற்குரிய சூழ்நிலையினையும், உள்ளத்துணர்ச்சிகளையும்
சொல்லோவியமாக
இவ்விளக்கவுரையாசிரியர்
புனைந்துரைத்துள்ளது
குறிப்பிடத் தக்கது. இம்முறை பாடிப்போருள்ளத்திற் பாடற் பொருளை
நன்கு பதியும்படி செய்யும். மேலும், இவ்வாசிரியர் பாடற் பொருளைத்
துறைக்குறிப்புடன்இயைந்துரைக்கும் முறை பெரிதும் சுவை பயப்பது.
ஓரளவு தமிழ்ப்பயிற்சியுடையாரும், புறநானூற்றின்
பொருள்
நலங்களைத்
தெளிவாக உணர்ந்து இன்புறும்படி இனிய எளிய
தமிழ்நடையில் இவ்வுரை அமைந்துளது. இக் காலத்து அரசியற்
சீர்திருத்தங்களிற் கருத்துடைய தமிழ்ச் செல்வர்கள், தமிழ்மாணவர்கள்,
தமிழ் நாட்டு வரலாற்றிற் கருத்துடையோர் ஆகிய
அனைவர்க்கும்
இவ்விளக்கவுரை
நன்கு பயன்படு மென்னும் துணிபுடையேன்.
இதனை அழகிய முறையில் வெளியிட்டுதவும் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருடைய தொண்டுபோற்றத் தக்கது.
|