|
12 அறவணர்த் தொழுத காதை |
|
|
||
|
[ மணிமேகலை பாத்திரம் கொண்டு |
|
|
தன்னூர் அறவணர்த் தொழுத பாட்டு ] |
|
|
||
|
ஆங்குஅவர் தம்முடன் அறவண அடிகள் |
|
|
யாங்குஉளர் என்றே இளங்கொடி வினாஅய் |
|
|
நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் |
|
|
உரைமூ தாளன் உறைவிடம் குறுகி |
|
5
|
மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி |
|
|
||
|
மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி, |
உரை |
|
புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும், |
|
|
உதய குமரன்ஆங்கு உற்றுஉரை செய்ததும், |
|
|
மணிமே கலாதெய்வம் மணிபல் லவத்திடை |
|
10
|
அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும், |
|
|
||
|
ஆங்குஅத் தீவகத்து அறவோன் ஆசனம் |
|
|
நீங்கிய பிறப்பு நேரிழைக்கு அளித்ததும், |
|
|
அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக் |
|
|
களிக்கயல் நெடுங்கண் கடவுளின் பெற்றதும், |
|
15
|
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் |
|
|
||
|
வெவ்வினை உருப்ப விளிந்துகேடு எய்தி |
|
|
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் |
|
|
கோதைஅம் சாயல் நின்னொடும் கூடினர் |
|
|
ஆங்குஅவர் தம்திறம் அறவணன் தன்பால் |
|
20
|
பூங்கொடி நல்லாய் கேள்என்று உரைத்ததும், |
உரை |
|
||
|
உரைத்த பூங்கொடி ஒருமூன்று மந்திரம் |
|
|
தனக்குஉரை செய்துதான் ஏகிய வண்ணமும், |
|
|
தெய்வம் போயபின் தீவ திலகையும் |
|
|
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும், |
|
25
|
அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை |
|
|
||
|
வணங்குஉறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும், |
|
|
ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால் |
|
|
கேள்என்று உரைத்துக் கிளர்ஒளி மாதெய்வம் |
|
|
போகென மடந்தை போந்த வண்ணமும் |
|
30
|
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும், |
உரை |
|
||
|
மணிமே கலைஉரை மாதவன் கேட்டுத் |
|
|
தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப் |
|
|
பொன்தொடி மாதர் நல்திறம் சிறக்க |
|
|
உற்றுஉணர் வாய்நீ இவர்திறம் உரைக்கேன்: |
|
35
|
நின்நெடுந் தெய்வம் நினக்குஎடுத்து உரைத்த |
|
|
||
|
அந்நாள் அன்றியும் அருவினை கழூஉம் |
|
|
ஆதி முதல்வன் அடிஇணை ஆகிய |
|
|
பாதபங் கயமலை பரவிச் செல்வேன் |
|
|
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன் |
|
40
|
||
|
||
|
மாபெருந் தானை மன்ன நின்னொடும் |
|
|
தேவியர் தமக்கும் தீதுஇன் றோஎன |
|
|
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி |
|
|
ஒளிஇழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் |
உரை |
45
|
புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று |
|
|
||
|
மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் |
|
|
ஆங்குஅது கேட்டுஓர் அரமியம் ஏறித் |
|
|
தாங்காது வீழ்ந்து தாரைசா வுற்றதூஉம் |
|
|
கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப |
|
50
|
பழவினைப் பயன்நீ பரியல்என்று எழுந்தேன் |
|
|
||
|
ஆடுங் கூத்தியர் அணியே போல |
|
|
வேற்றோர் அணியொடு வந்தீ ரோஎன |
|
|
மணிமே கலைமுன் மடக்கொடி யார்திறம் |
|
|
துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான், |
உரை |
55
|
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த |
|
|
||
|
நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்: |
|
|
தரும தலைவன் தலைமையின் உரைத்த |
|
|
பெருமைசால் நல்அறம் பெருகா தாகி |
|
|
இறுதிஇல் நல்கதி செல்லும் பெருவழி |
|
60
|
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்குச் |
|
|
||
|
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்என்று |
|
|
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது |
|
|
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் |
|
|
உண்டுஎன உணர்தல் அல்லது யாவதும் |
|
65
|
கண்டுஇனிது விளங்காக் காட்சி போன்றது |
உரை |
|
||
|
சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் |
|
|
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும் |
|
|
ஆங்குஅத் துளைவழி உகுநீர் போல |
|
|
ஈங்கு நல்அறம் எய்தலும் உண்டுஎனச் |
|
70
|
சொல்லலும் உண்டுயான் சொல்லுதல் தேற்றார் |
|
|
||
|
மல்லல்மா ஞாலத்து மக்களே ஆதலின் |
உரை |
|
சக்கர வாளத்துத் தேவர் எல்லாம் |
|
|
தொக்குஒருங்கு ஈண்டித் துடிதலோ கத்து |
|
|
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப |
|
75
|
இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து |
|
|
||
|
விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன |
|
|
ஈர்எண் ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில் |
|
|
பேர்அறி வாளன் தோன்றும்அதன் பிற்பாடு |
|
|
பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி |
|
80
|
இரும்பெரு நீத்தம் புகுவது போல |
|
|
||
|
அளவாச் சிறுசெவி அளப்புஅரு நல்அறம் |
|
|
உளம்மலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம் |
உரை |
|
கதிரோன் தோன்றுங் காலை ஆங்குஅவன் |
|
|
அவிர்ஒளி காட்டும் மணியே போன்று |
|
85
|
மைத்துஇருள் கூர்ந்த மனமாசு தீரப் |
|
|
||
|
புத்த ஞாயிறு தோன்றுங் காலைத் |
|
|
திங்களும் ஞாயிறும் தீங்குஉறா விளங்கத் |
|
|
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் |
|
|
வானம் பொய்யாது மாநிலம் வளம்படும் |
|
90
|
ஊன்உடை உயிர்கள் உறுதுயர் காணா |
|
|
||
|
வளிவலம் கொட்கும் மாதிரம் வளம்படும் |
|
|
நளிஇரு முந்நீர் நலம்பல தரூஉம் |
|
|
கறவைகன்று ஆர்த்திக் கலநிறை பொழியும் |
|
|
பறவை பயன்துய்த்து உறைபதி நீங்கா |
|
95
|
விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும் |
|
|
|
|
|
கலங்குஅஞர் நரகரும் பேயும் கைவிடும் |
|
|
கூனும் குறளும் ஊமும் செவிடும் |
|
|
மாவும் மருளும் மன்உயிர் பெறாஅ |
உரை |
|
அந்நாள் பிறந்தவன் அருள்அறம் கேட்டோர் |
|
100
|
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் |
|
|
||
|
போதி மூலம் பொருந்திய சிறப்பின் |
|
|
நாதன் பாத நவைகெட ஏத்துதல் |
|
|
பிறவி தோறும் மறவேன்; மடக்கொடி |
|
|
மாதர் நின்னால் வருவன இவ்வூர் |
|
105
|
ஏது நிகழ்ச்சி யாவும் பலஉள |
|
|
||
|
ஆங்குஅவை நிகழ்ந்த பின்னர் அல்லது |
|
|
பூங்கொடி மாதர் பொருள்உரை பொருந்தாய் |
உரை |
|
ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும் |
|
|
பாதபங் கயமலை பரசினர் ஆதலின் |
|
110
|
ஈங்குஇவர் இருவரும் இளங்கொடி நின்னோடு |
|
|
||
|
ஓங்குஉயர் போதி உரவோன் திருந்தடி |
|
|
தொழுதுவலம் கொண்டு தொடர்வினை நீங்கிப் |
|
|
பழுதுஇல் நன்னெறிப் படர்குவர் காணாய் |
உரை |
|
ஆர்உயிர் மருந்தாம் அமுத சுரபிஎனும் |
|
115
|
மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை |
|
|
||
|
மக்கள் தேவர் எனவிரு சார்க்கும் |
|
|
ஒத்த முடிவின் ஓர்அறம் உரைக்கேன் |
|
|
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் |
|
|
தவப்பெரு நல்லறம் சாற்றினர்,-ஆதலின் |
|
120
|
மடுத்ததீக் கொளிய மன்உயிர்ப் பசிகெட |
|
|
||
|
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான்என். |
உரை |
|
||
|
அறவணர்த் தொழுத காதை முற்றிற்று. |
|
மேல் |