|
குறிப்பு :- இதற்கு "நீணிதி வேண்டினார்க் கீவ தொன்று மற்றிலே னுன்னடி யல்லதொன்றறியேன்"
என்று "பேரருள் வினவிய செந்தமிழ்" என் றுரைசெய் தருளினர் ஆசிரியர். |
|
4-ம் திருமுறை :- அரசுகள் தேவாரம் |
|
"காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலு மாவடு துறைய னாரே" |
|
|
- (நேரிசை) |
|
11-ம் திருமுறை :- நம்பியாண்டார் நம்பிகள் |
|
"* * * சோலைத்
திருவா வடுதுறையிற் செம்பொற் கிழியொன்
றருளாலே பெற்றருளு மையன்......." |
|
|
- ஆளு. பிள். - திருத்தொகை. |
|
"* * * அத்தருசீர்
மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும்......." |
|
|
- மேற்படி - திருவுலா மாலை. |
|
"* * * கொண்டது
பூவிடு மதுவிற் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்னா யிரமே" |
|
|
- மேற்படி - திரமும்மணிக்கோவை - 4 |
|
" .* * * திரு வாவடு துறையிற் றிகழும்
எந்தையைப் பாட லிசைத்துக் தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்......" |
|
|
- மேற்படி - திருவந்தாதி - 85 |
|
(தீத்தொழில் - சிவ வேள்வி; தொலையாநிதியம் - உலவாக்கிழி.) |
|
9. விடந் தீர்த்தது - (திருமருகல்) |
|
2-ம் திருமுறை :- பிள்ளையார் தேவாரம் |
|
"* * * மருகல்
உடையாய் தகுமோ விவளுண் மெலிவே" (1)
"......மருகல், எந்தாய் தகுமோ விவளே சறவே" (2)
"......மருகல் மகிழ்வா யிவளை
........ இறையார் வளை கொண் டெழில்வவ் வினையே...." (3)
"......மருகல் மகிழ்வா யிவனை
மெலிநீர் மையளர்க் கவும்வேண் டினையே" (4)
"...... இவள் தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே" (5)
"புலருந் தனையுந் துயிலான் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே" (6)
"தொழுவா ளிவளைத் துயராக் கினையே" (7)
"........ இவளை, அலராக் கினையே" (8)
"....... இவளை, யயர்வாக் கினையே" (9)
"நெறியார் குழலி நிறைநீக் கினையே" (10) |
|
|
இந்தளம் - மருகல் |