|
குறிப்பு :- "உடையானை யுடையானே! தகுமோ விந்த வொள்ளிழை
யாளுண் மெலிவென் றெடுத்துப்
பாட" என்று இவற்றின் கருத்தினை
எடுத்துக்காட்டி யருளினர் ஆசிரியர். |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள் |
|
"வயலார் மருகற் பதிதன்னில் வாளர வாற்கடியுண்
டயலா விழுந்த வவனுக் கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்றுயர் தீர்த்த கருணைவெள்ளப்
புயலார்தருகையினானென்னத் தோன்றிடும் புண்ணியமே" |
|
|
- ஆளு. பிள். - திருவந்தாதி - 49 |
|
".......தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே" |
|
|
- ஆளு. பிள். - மும்மணிக்கோவை - 4 |
|
"......வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள்
போதன்" |
|
|
-மேற்படி - கலம்பகம் - 18 |
|
"........ மாற்றி யிட்டது வல்விட வாதையே..." |
|
|
- மேற்படி - 41 |
|
"....... மருகல்விடந் தீர்த்தபிரான்......." |
|
|
- மேற்படி - திருத்தொகை - |
|
10. படிக்காசு பெற்றது - (திருவீழிமிழலை) |
|
1-ம் திருமுறை:- பிள்ளையார் தேவாரம் |
|
"அடியவர் குழுமிட வவனியி னிகழ்பவர்" |
|
|
- வியாழக்குறிஞ்சி - வீழிமிழலை - 9 |
|
3-ம் திருமுறை:- மேற்படி |
|
".......மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்த......" |
|
|
- சாதாரி - வீழி - 3 |
|
"நண்ணிவரு நாவலர்க ணாடொறும் வளர்க்கநிகழ்
கின்றபுகழ்சேர்.." |
|
|
- மேற்படி - மேற்படி - 6 |
|
"......அடிக்கன்பர் துன்பிலரே" |
|
|
- ஈரடி - வீழி - 9 |
|
1-ம் திருமுறை:- |
|
"வாசி தீரவே, காசு நல்குவீர், மாசின் மிழலையீ, ரேச
லில்லையே" (1)
"கறைகொள் காசினை - முறைமை நல்குமே" (2)
"......மிழலையீர், கரக்கை தவிர்மினே" (8) |
|
|
- குறிஞ்சி - இருக்குக் குறள் |
|
7-ம் திருமுறை:- நம்பிகள் |
|
"....பரிசினா லடிபோற்று பத்தர்கள்
பாடியாடப் பரிந்து நல்கினீர்" (5)
".......... இ ருந்துநீர் தமிழோ டிசைகேட்கு
மிச்சையாற் காசுநல்கினீர்....." (8) |
|
|
- சீகாமரம் - வீழி |
|
9-ம் திருமுறை :- சேந்தனார் |
|
"பாடலங் காரப் பரிசில்கா சருளிப் பழுத்தசெந் தமிழ்மலர்
சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்க ணெஞ்சுனு ணிறைந்துநின் றானை" |
|
|
திருவிசைப்பா - வீழி. |