11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள்
 
"பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்த னிறைபுகழால்
நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழின் மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே"
 

- ஆளு. பிள். - திருவந்தாதி - 80

 
".....அவனியிடர் முழுதுபோ யகல,
வயலணிதென் வீழிமிழ லையினிலவு காசின்மலி
மழைபொழிபு மானகுண மதுரன்........"
 

- ஆளு. பிள். - கலம்பகம் - 24

 
"....வீழிமிழலைப் படிக்காசு கொண்டபிரான்"
 

- மேற்படி - திருத்தொகை.

  11. மறைக்கதவம் அடைத்தது - (திருமறைக்காடு)
  2-ம் திருமுறை:- பிள்ளையார்
 
"........மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க வெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொளுங்கருத் தாலே"
 

- இந்தளம் - 1

  11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள்
 
"அடைத்தது மாமறைக் காடர்தங் கோயிற் கதவினை"
 

- ஆளு. பிள். - திருவந்தாதி - 91

 
".........அடைத்தது
அரைசோ டிசையா வணிமறைக் காட்டுக்
குரைசேர் குடுமிக் கொழுமணிக்கோ யிற்கதவே......"
 

- மேற்படி - மும்மணிக்கோவை - 4

 
"..... இருங்கதவந் தானடைத்தும்....."
 

- மேற்படி - திருவுலா மாலை

 
".......நித்திலங்கண்
மாடத் தொளிரு மறைக்காட் டிறைகதவைப்
பாடி யடைப்பித்த பண்புடை யான்......."
 

- மேற்படி - திருத்தொகை

  12. பாண்டியன் சுரநோய் தீர்த்ததும் சுரவாதம் வென்றதும்
  1. வாதம் நிகழும்; அதில் திருநீறே வெற்றி தரும்; சமணர் அழிவுபெறுவர்; என்றது.
  2-ம் திருமுறை:- பிள்ளையார்
 
"புத்ததொ டமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க்கு மிகவே"
 

- பொது - பியந்தைக் காந்தாரம் - 10

  குறிப்பு :- இது பாண்டி நாட்டுக்குப் புறப்படு முன்பே திருமறைக் காட்டில் பிள்ளையார் அருளியது.
  2. பிள்ளையாரது திருமடத்தில் சமணர்கள் தீயிட்டதும்,
அவ்வெப்பு அரசனைச் சாரப் பிள்ளையார் அருளியதும்.