பகவத்
பக்தியை விசேஷமாகப் பாராட்டுகிற வைஷ்ணவ
மதத்தில் தமது இளம்பிராயத்தையும் பாலியத்தையும் கழித்த
நமது வித்வான், தம்மிடத்தில் அமைந்திருந்த இந்த விசேஷ
குணத்தை கிறிஸ்தவ மதத்துக்குங் கொணர்ந்தார்.
8.
வேத அறிவு. ஹென்ரி அல்பிரட்
கிருஷ்ணபிள்ளையவர்களியற்றிய ரக்ஷணிய யாத்திரிகம் ரக்ஷணிய
மனோகரம் என்னும் நூல்களை வாசிப்பவர்கள் வித்வானுடைய
வேத அறிவு இத்தன்மையதென்பதை ஒருவாறு நிதானிக்கலாம்.
வேத அறிவு என்றால் என்ன? அது வேதக் கதைகளை மட்டும்
நன்றாய்க் கற்றிருத்தல் அல்ல, வேத சங்கீதங்களையும் வேத
வசனங்களையும் பாராமல் படித்து மனனம்
பண்ணிக்கொள்ளுவதும் அல்ல; அது வேதத்தை
ஆராய்ச்சிசெய்து, அதன் சத்தியங்களைக் கண்டு, மனுஷ
ஜீவியத்துக்கும் ஜனசமூக நிலைமைக்கும்
உதவியாயிருக்கத்தக்கதாக அவற்றைக் கிரகித்துக்
கொள்ளுதலேயாகும். வித்வான் கிருஷ்ணபிள்ளை அவர்
இத்தகைய வேத அறிவை உடையவராயிருந்தார் என்பதற்கு
ஐயமில்லை. இதற்கு ஒரு திருஷ்டாந்தமாத்திரம் பார்ப்போம்.
தனித்தனி ஆட்களிடத்தில் பரிசுத்த ஆவியானவர் செய்யும்
கிரியைகளை இவர் எடுத்துக்கூறும்பொழுது,
பாவி
யென்றெனக் குணர்த்திய கருணையும் பாவநா
சரைக்காட்டி ஏவி யென்னையங் கவர்வயின் நடத்திடும்
இருந்திற மையுமெறகாய்
|
என்று வெகு அழகாக வர்ணித்திருக்கின்றார்.
இதில் பாவி
என்று மனிதனுக்கு உணர்த்துதல், பாவநாசகராகிய
இயேசுபெருமானை அவனுக்குக் காட்டுதல், அவரிடத்துக்குப்
போகும்படி அவனை ஏவுதல், அவரிடம் செல்ல
சக்தியற்றிருக்கும்பொழுது அவனை அவரிடத்துக்கு
நடத்திக்கொண்டுபோகுதல், மனிதனோடு அனுதாபப்பட்டு
அவனுக்காக பிதாவை நோக்கிப் பெருமூச்சுகளோடு
மன்றாடிக்கொண்டிருத்தல், மனித ஆத்மாவைச்
சுத்திகரித்துக்கொண்டிருத்தல்-இத்யாதி பரிசுத்தாவியின்
செய்கைகளெல்லாம் வேத சாஸ்திர யுக்தமாய் இக்கவியில்
சொல்லப்பட்டிருக்கின்றதைக் காணலாம். வேத சாரமானதும்
சாஸ்திர யுக்தம் பொருந்தியதுமான இத்தகைய கவிகள்
நூற்றுக்கணக்கானவை இவருடைய நூல்களில் கிடக்கின்றன.
வேத
சரித்திரம், வேத வியாக்கியானம், வேத உபதேசம்
என்னும் இவைகளில் வித்வானுடைய ஞானம் மகாப்பெரிது.
உலக சிருஷ்டிப்பு முதல் யோவானுடைய தரிசனம் வரையிலுள்ள
வேதக்கதைகள், சரித்திரங்கள், உபதேசங்கள், தீர்க்க
தரிசனங்கள் ஆகிய இவைகளில் ஏறக்குறைய எல்லாவற்றையும்
ரக்ஷணிய யாத்திரிகத்துள் எவ்வகையாக வேனும்
எடுத்தாண்டிருக்கின்றார். வியாக்கியானி அரண்மனைப்படலம்
சம்பாஷணைப்படலம் என்னும் பகுதிகள் வித்வானுக்கிருந்த
விசேஷ வேத அறிவைத் தெளிவாய்க் காட்டும்.
அன்னபக்
காட்டிலும் நூறு மடங்காகும். அவ்வித
அன்பையுடைய தற்பரனது சரணாரவிந்தங்களையே யன்றி
வேறெதையும் என் வாயானது மறந்ததும் துதியாது, எனது
சிரசானது மரணம் வந்தாலும் வணங்கமாட்டாது.
|