9. ஆத்மதாகம். கிறிஸ்து பெருமானிடத்தில்
தான்
அடைந்த அருட்செல்வத்தைப் பிறரும் அடையவேண்டும்
என்னும் ஆசை வித்வானை மிகவும் அசைத்தாட்டியது.
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தைப்
பிரசங்கிப்பது தமது கடமை என்று உணர்ந்தவராய், இவ்வித
ஊழியத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார். இதன்பொருட்டு
அவர் தனியாகவும் பிறரோடு சேர்ந்தும் சுவிசேஷத்தைப்
பிரசங்கித்து வந்தார். தன் வீட்டுக்கு அடிக்கடி வரும்
மாணாக்கர்களுக்கும் தன்னைக் காணவரும் நண்பர்களுக்கும்
ரக்ஷா பெருமானாகிய இயேசுநாதரைக் குறித்துப் பேசுவார்.
கல்வித்திறமையும் ஹிந்துமத அறிவும் மிகுதியாகவுடைய நம்
வித்வான் நடாத்தும் மார்க்க சம்பாஷணைகள் மெத்த ருசி
கரமாயிருக்கும். இவருடைய போதனைக்கும் சாதனைக்குமுள்ள
ஒற்றுமையைக் கண்டவர்கள் இவருடைய சம்பாஷணைகளையும்
உபதேசங்களையும் மிகவும் மதித்து வந்தனர்.
வித்வானுக்கிருந்த ஆத்மதாகத்தின் தன்மையையும்
பெருமையையும் ரக்ஷணிய யாத்திரிகத்துள் இரக்ஷணிய
நவநீதப்படலம் என்னும் பகுதியில் நன்கு காணலாம்.
இப்படலத்தில் கிறிஸ்துமார்க்கத்தின் சாரத்தை நூறு
விருத்தங்களால் கூறுகின்றார். இவ்விருத்தங்களில்
ஒவ்வொன்றும் ஜெகத்தீரே
என்னும் மகுடத்தைக் கொண்டு
முடியும். திருஷ்டாந்தமாக:-
|