இவர்களெல்லாம்
ஹிந்து மார்க்கத்தில் உயர்ந்த ஜாதியில்
பிறந்தோர். வித்வான் கிருஷ்ணபிள்ளையினுடைய நற்குண
சீலத்தினால் கவரப்பட்டு, அவரது உபதேசத்தைக் கேட்டு,
அதன் பலனாக இயேசு பெருமானைத் தங்கள் ஆன்மநாயகராக
ஏற்றக்கொண்டவர்கள்.
இவ்விஷயத்தில்
நம் வித்வானுக்கிருந்த விசேஷ
முயற்சியைப்பற்றி மிஸ் கார்மைக்கேல் மிசியம்மாள் கூறுவது
நாம் கவனிக்கத்தகுந்தது:-
'ஞானவான்களாகிய
ஹிந்து சமய நண்பர்களையும் எளிதில்
திருப்தியடையாத மானிடர்களையும் ஆதாயப்படுத்தும்
வகையில் இவர் வரம் பெற்றிருந்தார். மனிதனைப் பிடிக்கிறவர்
எனப் பேர்பெற்றிருந்தார். சிறிய மாணவர்களையும் ஆத்ம
விசாரணையாளர்களையும் ஜாதிக்கட்டுக்குள்ளகப்பட்ட ஹிந்து
சமயத்தவர்களையும் ஆதாயப்படுத்தினவர் இவருக்கு பின்
ஒருவருமில்லை. பலர் இவரை அபிமானிக்கச் செய்வித்தது
இவரது கல்வித்திறமை மட்டுமல்ல, இவரது குணாதிசயமும்
முக்கியமாகும்.' என்று சொல்லுகின்றனர். ஆத்மதாகம்
இவருடைய மனதில் அக்நி போல் ஜுவாலித்தது" என்று
இவருடைய சரித்திரக்காரர் கூறுகின்றார்
. 1
புதுக்கோட்டை P.S.
கடம்பவன சுந்தரநாயனார்
என்னும் பெயரையுடைய கிறிஸ்தவபக்தர் 1924 ஆம்
வருடம்
கிருஷ்ணபிள்ளையவர்களது ஜீவிய சரித்திரம்
என்னும் சிறிய
நூலை எழுதினார். இதற்குப் பாளையங்கோட்டை திவான்
பகதூர் அப்பாசாமிபிள்ளையவர்களும் மதுராஸ் ஐக்கோர்ட்
ஜர்ஜாகிய ஆனரபில் ஜஸ்டிஸ்
|