திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

முருகப்பெருமான் மீது பகழிக்கூத்த ரென்னும் புலவர் பெருமானால்
இயற்றப் பெற்ற சிறப்புப் பொருந்தியது. 

முருகப் பெருமான், அன்பர் நினைந்த வடிவோடெழுந்தருளி அவர்
வேண்டுவனவற்றை அருள்சுரந்தளிக்கும் அண்ணல்; அவன் மாமயில்
மீதமர்ந்து வருங்காட்சி அலைகடல் நடுவண் காலைப்போதில் தோன்றும்
இளவளஞாயிற்றின் தோற்றத்தையும் ஏற்றத்தையும் ஏய்ப்பக்கண்டு போற்றத்
தகுவதாகும். 

அம் முருகவேள், காடும் காவும் கவின்பெறு துரத்தியும், யாறுங்
குளனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப் பூங்கடம்பும்,
மன்றமும், பொதியிலும் கந்துடை நிலையினும் எழுந்தருளித் தன்னை
வழிபடும் அடியார்க்கு அருள் சுரந்தருளுவன். 

இத்தகைய பெருமான் தேவுணவை வெறுத்து மேந்தமிழால் ஓதுசுவைக்கு
உழலுந் திருச்செவியுடையோன்: இக்கருத்தானே ‘முத்தமிழால் வைதாரையும்
வாழவைக்கும் முதல்வ’ னென அருளினர் அருணகிரிப் பெருமானார். 

இப்பெருமான் ஏற்ற பிள்ளைத்தமிழ் நூல்களுள் இஃதொன்றெனின்
மிகையாகாது. இதனை உள்ளங்கரைந்து ஒவ்வொருநாளும் ஓதுவோர். 
எண்ணிய எண்ணியாங் கெய்தி எல்லா இன்பமும் இடையறாதென்றும்
பெற்றுத் திகழ்வர். 

சீரானும் ஏரானுமிக்க இந்நூல் கொழிதமிழ்பனுவற்றுறையின்
இன்பநலத்துக்கு எடுத்துக்காட்டாக இன்னிசை இழுமென்