பதிப்புரை
மொழியால்
இயைந்தசொல்லழகு பொருளாழம் கற்பனைத் திறம் பலவும்
ஒருங்கே கெழுமிஓதுவார் உளத்தில் முருகுப்
பெருமான்
நாண்மலர்த்திருவடிகள் எழுந்தருளும் வாய்ப்புப் பெற்றுய்யச் செய்யும்
பெருமை மிக்கதாகும்.
இதன் ஓசையின்பத்துடன் பொருளின்பமும் கண்டுணர வாய்ப்பாக நம்
கழகப்
புலமையாளர், பெருநாவலர் பேராசிரியர் வித்துவான் திரு. பு.சி.
புன்னைவனநாத முதலியாரவர்களைக்
கொண்டு அருஞ்சொற்
பொருளுரையெழுது வித்து அச்சிட்டு அழகிய அமைப்புடன் நூலருவாக்கி
வெளியிட்டுள்ளோம்.
இச்சீரியதீஞ்சுவை நறுஞ்சுவை அமிழ்தை நம்தமிழகத்தார் வாங்கிக்
கற்றாரும்
மற்றாரும் ஓதி உணர்ந்து ஒருமுகத்தறுமுகத்திருவினன்
அருள்பெற்று எம்மையும் இன்னன போன்ற நன்னர்ப்
பணிக்கண் ஒருவாது
இன்புற ஆற்ற உதவுவார்களென நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
|