முகவுரை
11
காணப்படவில்லை. பரம்பரையாகப் பாடம் சொல்லுபவர்கள் இம்மூன்றையும் குமரகுருபர சுவாமிகள் நூல்களோடு சேர்த்துச் சொல்வதில்லை. என்னுடைய தமிழாசிரியராகிய மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களும் வேறு பல வித்துவான்களும் இவற்றைக் குமரகுருபரமுனிவர் வாக்காகக் கருதுவதில்லை. இவற்றின் சொற்பொருளமைதிகளை ஆராய்ந்தாலும் இவற்றிற்கும் இம்முனிவர் இயற்றிய பிரபந்தங்களுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாகப் புலப்படும். இதற்குமுன் வெளிவந்துள்ள பதிப்புகளில் இவையும் சேர்க்கப்பட்டுள்ளதை எண்ணி யானும் இவற்றைத் தனியே பின்னால் இப்பதிப்பிலை சேர்த்திருக்கிறேன்.
எனது இளமைமுதலே எனக்குக் குமரகுருபர முனிவர் வாக்கில் ஈடுபாடு மிகுதியாக இருந்து வந்தது. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முழுவதையும் அப்போது பாராயணம் செய்துவந்தத்துண்டு. தமிழ்நாட்டிலிருந்த வித்துவான்கள் சில வகையானக் கற்பனைச்செய்யுட்களைப் பாடம் செய்து கொண்டு அவற்றைக் கூறிப் பொருள் விரிவாகச் சொல்லி அவ்வப்போது தம்மிடம் வருவோர்களையும் தாம் செல்லுமிடங்களில் உள்ளோரையும் மகிழ்வித்து வருதலைத் கண்டிருக்கிறேன். அங்ஙனம் அவர்கள் கூறும் செய்யுடகளில் குமரகுருபர்ர் செய்யுட்களும் இருக்கும்.
பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டுவந்த காலத்தில் திருவாவடுதுறை யாதீன மடத்திலுள்ள ஏட்டுப் பிரதிகளை வைத்து நானும் பிறரும் படித்து வந்தோம். அக்காலத்தில் குமரகுருபர்ர் பிரபந்தங்களிற் சில தனித்தனியே அச்சிடப்பெற்று வழங்கி வந்தன. அப்பால் சென்ற விரோதி (1889) வருஷத்தில் என்னுடைய நண்பரும் சிதம்பரம் ஈசானிய மடத்தைச் சார்ந்தவருமான ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் குமரகுருபர ச்வாமிகள் பிரபந்தத்திரட்டை ஸ்ரீமான் பூண்டி அரங்கநாத முதலியார் பொருளுதிவியால் வெளியிட்டனர். அக்காலத்தில் என்னிடமிருந்த சில ஏட்டுச்சுவடிகளிற் கண்ட பாடங்களை அப்பதிப்பில் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி கொடுத்தேன்.
அதன்பிறகு தமிழ்நாட்டில் யான் யாத்திரை செய்துவந்த காலத்தில் அங்கங்கே கண்ட குமரகுருபரர் பிரபந்த ஏட்டுச் சுவடிகளிலுள்ள பாடங்களை என் கைப்பிரதியிற் குறித்துக் கொண்டு வந்தேன். அவற்றாற் பல திருத்தங்கள் கிடைத்