|
12
|
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு
|
|
|
|
தன. நாளடைவில் குமரகுருபர்ர் பிரபந்தங்கள் தனித்தனியாகவும் உரையுடனும் உரையின்றியும் பலராற் பதிப்பிக்கப் பெற்றன. திருநெல்வேலி, தென்னிந்திய-சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இப்பிரபந்தத்திரட்டின் பதிப்பொன்றைக் குறிப்புரையோடு வெளியிட்டிருக்கின்றனர். அதில் கைலைக் கலம்பகச் செய்யுடகள் சில காணப்படுகின்றன.
|
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் இப்போது 19-ஆம் பட்டத்தில் தலைவர்களாக விளங்கும் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகளவர்கள்* இயற்கையிலேயே கல்விச்செலவம் வாய்ந்திருப்பதோடு, கோடீச்சுரக்கோவை முதலிய நூல்களை இயற்றியும் தஞ்சை ஸமஸ்தானத்தில் தமிழ்வித்துவானாக இருந்தும் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்தும் புகழோடு விளங்கிய கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகரவர்களது பரம்பரையில் உதித்தவர்களாதலால் தமிழ்க்கல்வி யுடையாரிடத்தும் பேரன்பு காட்டி வருகிறார்கள். இவர்கள் 1930-ஆம் வருஷத்தில் இப்பிரபந்தங்களுள் முதலாவதான கந்தர் கலிவெண்பாவைக் குறிப்புரையுடன் க்ஷ மடத்து ஆயிரம் ரூபாய்த் தமிழ் பரிசை முதன்முறையாகப் பெற்றவரும் சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதருமாகிய சிரஞ்சீவி வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயரைக் கொண்டும், அதே வருஷத்தில் தமிழ்விடுதூதையும், 1931-ஆம் வருஷத்தில் மதுரைச் சொக்கநாதருலாவையும், 1932-ஆம் வருஷத்தில் கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்களையும் என்னைக்கொண்டும் குறிப்புரை முதலியவற்றுடன் அச்சிடுவித்துத் தமிழ் படித்தவர்களுக்கெல்லாம் நன்கொடையாக வழங்கி உபசரித்தார்கள்.
|
தாம் பிறந்த குலத்துப்பெரியாராகிய ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகருடைய பிரபந்தங்களை வெளியிட்டுதவியது போலப் புகுந்தவிடத்துப் பெரியாராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளுடைய பிரபந்தங்களையும் குறிப்புரையுடன் வெளியிடவேண்மென்று அவர்கள் சில வருஷங்களுக்குமுன் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் விரும்பியபடியே ஆராயந்து சென்ற வருஷம் பதிப்பிக்கத்தொடங்கி இப்பொழுது இப்பிரபந்தங்களை வெளியிடலானேன். இப்பதிப்பில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கமும், ஆராய்ச்சியும், மூலமும், குறிப்புரையும், அரும்பத முதலியவற்றின் அகராதியும் காணப்படும்.
|
|
|
| |