xxx

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

நெல்லி - திருநெல்லிக்கா, நெல்லித்தோப்பு
ஆல் - திருவாலங்காடு
பூல் - பூலாங்குறிச்சி
குமரி என்பது ஒரு மூலிகைச் செடி. இதனைச் சோற்றுக்கற்றாழை என்று நாட்டுப்புற மக்கள் வழங்குவர். குமரிச்செடி மிகுந்திருந்த காரணத்தினால் குமரிக்கண்டம் எனப் பெயர் வழங்குவதாயிற்று.
மூலிகை என்பதன் கடைக்குறை மூலி,
இலை + மூலிகை - இலைமூலிகை
இலைமூலி - இலைமூரி - இலெமூரி
ஒ.நோ : குடல் - குடர், பந்தல் - பந்தர், திடல் - திடர், கூதல் - கூதர், சாம்பல் - சாம்பர், இலுப்பை - இருப்பை, போக்கிலி - போக்கிரி
இலெமூர் என்னும் குரக்கினம் வாழ்ந்ததனால், இலெமூரியா என வழங்கிற்று என்பதனைவிட இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமூரியா எனக் குமரிக்கண்டம் வழங்கப்பட்டது என்பது சாலப் பொருந்து.
மொழித்தோற்றம்
எங்கு முதன் மாந்தன் தோன்றினானோ அங்குத்தான் ஞால முதுன்மொழியும் தோன்றியிருக்க முடியும். குமரி மாந்தன் முதன் மாந்தன். அவன் பேசிய மொழியே முதன்மொழி. அதுவே, நந்தம் தாய்மொழியாம் தமிழ். இது பாவாணரின் அசைக்கமுடியாத கருத்து.
இயல்பாகத் தோன்றிய இயன்மொழிக்குப் பதினாறு பண்புகள் இருக்க வேண்டும். அப் பதினாறும் அமைந்த மொழி தமிழ் ஒன்றுமட்டுமே.
தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஒண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பெனப்
பன்னுவர் மொழிவலர் பாவாணர் தாமே.
மொழி எண்ணத்தைப் புலப்படுத்தும் கருவி.
முதல் மாந்தனுக்கு மொழி தேவையில்லை. அவன் மக்களைப் பெற்றுப் பெருகிய பின்னர்க் கூடிவாழத் தலைப்பட்டான்; தன் எண்ணத்தைக் கைக்குறியாலும் முகக்குறியாலும் படக்குறியாலும் பிறர்க்குப் புலப்படுத்தினான். இக் குறிகள் இரவிலும் தொலைவிலும் பயன்படுத்த முடியாததனால் அதன் பின்னரே மொழி தோன்றிற்று.
"வைய மீன்றதொன் மக்கள் உளத்தினைக்
கையி னாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை யசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம்"
என்பார் தஞ்சைப் பெரும்புலவர் நீ.கந்தசாமிப்பிள்ளை.