நக்கீரன் எனும் நான் உறந்தைராயன்குடிக்காட்டில் அப்பாவு
- பாப்பம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 22-7-1927-ல் பிறந்தேன்.
தொடக்கக் கல்வியை உள்ளூரிலும், உயர்நிலைக் கல்வியை
உரத்த நாட்டிலும் பயின்றேன். 1946-ல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று
1947 முதல் ஆசிரியராய்ப் பணியாற்றினேன். 1954-ல் புலவர் பட்டமும், 1968-ல்
இந்தி விசாரத்துப் பட்டமும், 1979-ல் தமிழில் கலை முதுவர் பட்டமும் பெற்றேன்.
1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில்பணியாற்றி
1986-ல் ஓய்வு பெற்றேன். |