தஞ்சைப் பட்டுக்கோட்டைப் பெரும்பாட்டையில் அமைந்துள்ள
ஒரு சிற்றூர். இந்தச் சிற்றூரில்தான் பதிப்பாசிரியரும் பதிப்பாளரும் பிறந்தனர்;
வளர்ந்தனர்; கல்வி கற்றனர்; தொண்டாற்றினர். இவ் வூரில் 1954-ல் 'ஊர்
நலன் வளர்ச்சிக் கழகம்‘ என்று ஒரு நற்பணிக் கழகம் தொடங்கப்பட்டுப் பல நற்பணிகளைப்
புரிந்தது. |