“நிகழிருசீர்...............அகல்பொருண்மட்டு” - என்பதற்கு உதாரணம் வருமாறு:- “திரைத்த சாலிகை - நிரைத்த போனிரந் திரைப்ப தேன்களே - விரைக்கொண் மாலையாய்” இஃது அடிதோறும் இருசீராதலால், குறளடியான் வந்த செய்யுள். “இருது வேற்றுமை யின்மையாற் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய்” இஃது அடிதோறும் முச்சீராதலால், சிந்தடியான் வந்த செய்யுள். “தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியு மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே” இஃது அடிதோறும் நாற்சீராதலால் அளவடியான் வந்த செய்யுள். வென்றான் வினையின் றொகையாய விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றுஞ் சென்றான் றிகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார் இஃது அடிதோறும் ஐஞ்சீராதலால் நெடிலடியான் வந்த செய்யுள் “இரைக்கு மஞ்சிறைப் பறவைக ளெனப்பெயர்ந் தினவண்டு புடைசூழ, நுரைக்க ளென்னுமக்*குழம்புக டிகழ்ந்தெழ நுடங்கிய விலயத்தால், திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத், தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே” இஃது அறுசீர்க் கழிநெடிலடியான்வந்த செய்யுள். “கணிகொண் டலர்ந்த நறுவேங்கை யோடு கமழ்கின்ற காந்தளிதழா லணிகொண் டலர்ந்த வனமாலை சூடி யகிலாவி குஞ்சி கமழ *“குழம்புகொண்டெதிர்ந்தெழ” என்றும் பாடம். |