மணிகுண் டலங்க ளிருபாலும் வந்து வரையாக மீது திவளத் துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு வருவா னிதென்கொ றுணிவே.” இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். “மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாண முழுதுலகு 1 மூடி முளைவயிர நாறித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற் சுடரோயுன் னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால் சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச் சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து புலன்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே” இஃது எண்சீர்க்கழிநெடிலடியான் வந்த செய்யுள். “இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெதிர்ந்த தாரையை யிலங்கு மாழியின் விலங்கியோள் முடங்கு வாலுளை மடங்கன் மீமிசை முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோள் வடங்கெரண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன் றடங்கொ டாமரை யிடங்கொள் சேவடி தலைக்கு வைப் பவர் தமக்கு வெந்துயர் தவிர்க்குமே” இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். “கொங்கு தங்கு கோதையோதி மாத ரோடு கூடி நீடு மோடை நெற்றி வெங்கண்யானை வேந்தர்போந்து வேத கீத நாத வென்று நின்றுதாழ அங்க பூர்வ மாதி யாய வாதி நூலி னீதி யோது மாதி யாய செங்கண்மாலை2காலை சென்று சேர்நர்சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே”
1 “மூடியெழின் முளைவயிர நாற்றி’ என்றும்பாடம். 2 “மாலை காலை சேர்நர் சேர்வர்” என்றும் பாடம். |