என்பது-விளமென நிற்ப நிரையெனவருவது நிரையொன்றாசிரியத் தளை; மாவெனநிற்ப நேரென வருவது நேரொன்றாசிரியத்தளை; காயெனநிற்ப நேரெனவருவது வெண்சீர் வெண்டளை; காயெனநிற்ப நிரையென வருவது கலித்தளை; கனியென நிற்ப நேரெனவருவது ஒன்றாதவஞ்சித்தளை; கனியெனநிற்ப நிரையெனவருவது ஒன்றியவஞ்சித்தளை; மாவெனநிற்ப நிரையெனவருவதும் விளமெனநிற்ப நேரெனவருவதும் இயற்சீர் வெண்டளை எனவரும்; தண்ணிழற்சீருக்கும் நறுநிழற்சீருக்கும் கனிச்சீருக்குரைத்தாங்குத் தளைகொள்க; தண்பூச்சீருக்கும் நறும்பூச்சிருக்கும் காய்ச்சீருக்கு உரைத்த தளையே கொள்க. இவற்றுக்குதாரணம்:- “திருமழை தலைஇய விருணிற விசும்பின் விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே.” இது நிரையொன்றாசிரியத்தளையும் நேரொன்றாசிரியத்தளையும் வந்த செய்யுள். “பொன்னாரமார்பின்” - இது வெண்சீர் வெண்டளையும் இயற்சீர்வெண்டளையும் வந்தசெய்யுள். “செல்வப்போர்க் கதக்கண்ணன்”-இது கலித்தளையான் வந்த செய்யுள். “சுறமறிவன துறையெல்லாம்”- இஃது ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாதவஞ்சித்தளையும் வந்த செய்யுள். நாலசைப் பொதுச்சீருக்குத் தளை முன்னர்க்காட்டிய ‘அங்கண்வானத்து’ என்னும் வஞ்சிப்பாவினுட் கண்டுகொள்க. (3) |