பக்கம் எண் :
 
8சிதம்பரப்பாட்டியல்

வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
வனந்தசதுட்டய மவையெய்த
நனந்தலையுலகுட னவைநீங்க
மந்தமாருத மருங்கசைப்ப
அந்தரதுந்துபி நின்றியம்ப
இலங்குசாமரை யெழுந்தலமர
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந், தருணெறி நடாத்திய வாதிதன்
திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.”

இக்குறளடி   வஞ்சிப்பாவினுள்   பொதுச்சீர்  பதினாறும்  அடிதோறும்
வந்தவாறு கண்டுகொள்க.

“நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்”

இவ்வெண்பாவினுள ‘இலர்’ என நிரையசைச்சீராயினவாறு  கண்டுகொள்க.

“பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர்”

இவ்வெண்பாவினுள்  ‘நீர்’  என  நேரசைச் சீராயினவாறு கண்டுகொள்க.
பிறவுமன்ன. இனி, ஓரசைச்சீருக்குத் தளைவருமாறு:-

“உரிமை யின்க ணின்மையால்
அரிமதர் மழைக் கண்ணாள்
செருமதி செய் தீமையால்
பெருமை கொன்ற வென்பவே”

இம்முச்சீரடி     வஞ்சிவிருத்தத்துள்     ‘மழை’    ‘செய்’    என்னும்
அசைச்சீர்கள்       இயற்சீரேபோலக்கொண்டு,             வருஞ்சீர்
முதலசையோடொன்றாமலும்     ஒன்றியும்   வந்தமையால்,   முறையே
இயற்சீர்வெண்டளையும் ஆசிரியத்தளையுமாயின.                 (2)

 

3.

மருவுவிள முன்னர்நிரை நிரையொன்றா சிரிய
   மாமுன்னேர் வரினேரொன் றாசிரியத் தளையாம்
விரவியகாய் முன்னர்நேர் வெண்சீர்வெண்டளையா
   மீட்டுங்காய் முன்னர்நிரை
* கலித்தளையா[மின்னே


* “மேவுகலித்தளையாம்” எனவும் பாடம்.