பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்7

நிரைநிரைநேர்நேர்          கருவிளந்தண்பூ,       நேர்நிரைநேர்நேர்
கூவிளந்தண்பூ     எனவும்;      நேர்நேர்நிரைநேர்     தேமாநறும்பூ,
நிரைநேர்நிரைநேர்  புளிமாநறும்பூ,  நிரைநிரைநிரைநேர் கருவிளநறும்பூ,
நேர்நிரைநிரைநேர்    கூவிளநறும்பூ    எனவும்,    நேர்நேர்நிரைநிரை
தேமாநறுநிழல்,            நிரைநேர்நிரைநிரை       புளிமாநறுநிழல்,
நிரைநிரைநிரைநிரை     கருவிளநறுநிழல்;         நேர்நிரைநிரைநிரை
கூவிளநறுநிழல் எனவும் வரும்: இவை பொதுச்சீர்.  நாண் மலர் என்பன
ஓரசைச்சீர். இவற்றிற்கு உதாரணம்:-

“குன்றக் குறவன் காதன் மடமகள்
வரையா மகளிர் புரையுஞ் சாயலள்
ஐய ளரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே”

இவ்வாசிரியப்பாவினுள் நான்காசிரியவுரிச்சீரும் வந்தவாறு  கண்டுகொள்க.

“பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே
ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ
மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப்
புனனாடன் பேரே வரும்.”

இவ்வெண்பாவினுள் வெண்பாவுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டுகொள்க.

“சுறமறிவன துறையெல்லாம்
இறவீன்பன வில்லெல்லாம்
மீன்றிரிவன கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
எனவாங்கு:
தண்பணை தழீஇய விருக்கை
மண்கெழு நெடுமதின் மன்ன னூரே.”

இவ்வஞ்சிப்பாவினுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தவாறு  கண்டுகொள்க.

“அங்கண்வானத் தமரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தன் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
கொங்கவிரசோகின் குளிர்நிழற்கீழ்ச்
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையு முக்குடை நீழல்