“நிரலியற்சீர்.........நேர்நிரை கூவிளம்” என்றது, இந்த ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியச்சீர் என்றவாறு. நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை எனவும், தேமா புளிமா கருவிளம் கூவிளம் எனவும் வரும். “பின்வரும் நேர்காய் வெள்ளை” என்றது, அவை நிரலேநிற்க, பின்னேவரும் நேர், நேர்நேர்நேர்: தேமாங்காய்: பிறவுமன்ன; இவை நாலும் வெண்சீர் என்றவாறு. “நிரைவரிற் கனிவஞ்சிச்சீர்” என்றது, இப்படியே பின்னே நிரை நாலும் வந்தால் நேர்நேர்நிரை: தேமாங்கனி; பிறவுமன்ன; இவை நாலும் வஞ்சிச்சீர் என்றவாறு. ‘மற்றும் நேர்நிரைவரில்...பகருநறுநிழல்’ என்றது, அவ்வாறு பின்னே நேர்நிரைவந்தால் நேர்நேர்நேர்நிரை: தேமாந்தண்ணிழல்: பிறவுமன்ன; அப்படிப்பின்னே நேர்நேர் வந்தால் நேர்நேர்நேர்நேர்: தேமாந்தண்பூ: பிறவுமன்ன. பின்னே நிரைநேர் வந்தால் நேர்நேர்நிரைநேர்: தேமாநறும்பூ: பிறவுமன்ன. பின்றான் நிரைநிரை வந்தால் நேர்நேர்நிரைநிரை: தேமாநறுநிழல்: பிறவுமன்ன. இவைபதினாறு பொதுச்சீரும் வஞ்சி. “நாண்மலரோரசைச்சீர்” என்றது, நாள் எனவும் மலரெனவும் வருமிவையிரண்டும் ஓரசைச்சீர் என்றவாறு. ஆகச்சீர் முப்பது. இந்த ஓரசைச்சீருக்குத்தளை ஆசிரியச்சீருக்குரைத்த தளையெனக்கொள்க. ‘நிரல்’ என்பதனையும் பின்னென்பதனையும் எல்லாவற்றிற்கும் தீபமாக ஒட்டிக்கொள்க. “இயற்சீராசிரியச்சீ் ரகவற், சீரென மொழிப சிறந்திசி னோரே.” வாய்பாடு:-நேர்நேர் தேமா, நிரைநேர் புளிமா, நிரைநிரை கருவிளம், நேர்நிரை கூவிளம்: இவை ஆசிரியச்சீர். நேர்நேர்நேர் தேமாங்காய், நிரைநேர்நேர் புளிமாங்காய், நிரைநிரைநேர் கருவிளங்காய், நேர்நிரைநேர் கூவிளங்காய்: இவை வெண்சீர். நேர்நேர்நிரை தேமாங்கனி, நிரைநேர்நிரை புளிமாங்கனி, நிரைநிரைநிரை கருவிளங்கனி, நேர்நிரைநிரை கூவிளங்கனி: இவை வஞ்சிச்சீர். நேர்நேர்நேர்நிரை தேமாந்தண்ணிழல், நிரைநேர்நேர்நிரை புளிமாந்தண்ணிழல், நிரைநிரைநேர்நிரை கருவிளந்தண்ணிழல், நேர்நிரைநேர்நிரை கூவிளந்தண்ணிழல் எனவும்; நேர்நேர்நேர்நேர் தேமாந்தண்பூ, நிரைநேர்நேர்நேர் புளிமாந்தண்பூ, |