பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்13

“ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்
விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும்
குளக்கொட்டிப் பூவி னிறம்”

இஃது ஓரடிமுழுதும் வந்தமொழியே வந்தமையால் இரட்டைத்தொடை.

“பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே”

இது   மோனைமுதலாகிய  தொடையின்றி  வந்தமையாற்  செந்தொடை;
பிறவுமன்ன.                                               (4)
 

5.

தொடையெழுவா யெழுத்தொன்றின் மோனையியை பிறுதி
   சொல்லிரண்டா மெழுத்தொன்றி னெதுகைபொருண்
                                      மொழிகள்
யுடன்முரணின் முரணளபு வருதலடி யளவே
   யுயரிருசீ ரிணைதலிணை முதலொடுமூன் றாஞ்சீர்
அடைபொழிப்பு நடுவிருசீ ரகறலொரூஉ வடியி
   னடர் தருமுச் சீர்கூழை முதலயற்சீர் நீங்கல்
கெடலருமேற் கதுவாயே யீற்றயற்சீர் நீங்கல்
   கீழ்க்கதுவாய் சீர்முழுதுங் கிடைத்திடின்முற் றாமே.
 

“தொடையெழுவாய்     எழுத்து  ஒன்றின்  மோனை”  -  என்றது,
அடிதோறும்        முதலெழுத்து        ஒன்றிவரத்     தொடுப்பது
அடிமோனைத்தொடை,.  “இயைபு  இறுதி” என்றது, அடிதோறும் இறுதி
யெழுத்து        ஒன்றிவரத்தொடுப்பது         அடியியைபுத்தொடை.
“சொல்லிரண்டாம்   எழுத்தொன்றின்  எதுகை”  என்றது,  அடிதோறும்
இரண்டாமெழுத்து    ஒன்றிவரத்தொடுப்பது   அடியெதுகைத்  தொடை.
“பொருண்  மொழிளுடன்  முரணின்  முரண்”  என்றது,  பொருளானே
யாயினும்  சொல்லானே  யாயினும்  அடிதோறும்  முதன்  மொழிக்கண்
மறுதலைப்படத்   தொடுப்பது   அடிமுரண்டொடை.  “அளபு  வருதல்
அடியளவே”  என்றது,  அடிதோறும்  முதன்  மொழிக்கண் அளபுவரத்
தொடுப்பது,
அடியளபெடைத்தொடை. “உயரிருசீரிணை தலிணை ............
சீர்முழுதுங்  கிடைத்திடின் முற்றாமே” என்றது, முன் சொன்ன மோனை
இயைபு   எதுகை  முரண்  அளபு  என்னும்  இவ்வைந்தினும்  இணை
பொழிப்பு  ஒரூஉ  கூழை  மேற்கதுவாய்  கீழ்க்கதுவாய் முற்று என்னும்
இவை  ஏழுங்  கூட்டி  உறழ  முப்பத்தைந்து  தொடையாம் வரலாறு;-
இணைமோனைத்தொடை, பொழிப்புமோனைத்தொடை, ஒரூஉமோனைத்