தொடை, கூழைமோனைத்தொடை, மேற்கதுவாய் மோனைத்தொடை, கீழ்க்கதுவாய் மோனைத்தொடை, முற்றுமோனைத்தொடை எனவும்; இவ்வாறே இயைபு, எதுகை முதலியவற்றோடு ஒட்டியும் ஆகத்தொடை முப்பத்தைந்தாமாறு கண்டுகொள்க. “மாவும் புள்ளும் வதிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடையின் மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே”. இஃது அடிதோறும் முதலெழுத்தொன்றிவரத் தொடுத்தமையால் அடிமோனைத்தொடை. “இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே ஆடமைத் தோளிக் கூடலு மணங்கே அரிமதர் மழைக்கணு மணங்கே திருநுதற் பொறித்த திலதமு மணங்கே.” இஃது அடிதோறும் இறுதியெழுத்தொன்றிவரத் தொடுத்தமையால் அடியியைபுத்தொடை. “தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே.” இஃது அடிதோறும் இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுத்தமையால் அடியெதுகைத்தொடை. “இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின் நிலவுகுவித் தன்ன வெண்மண லொருசிறை இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னி னன்ன நுண்டா திறைக்கும் சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணு முடையவா லணங்கே.” |