“பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும்.” இஃது அளவடியானுஞ் செப்பலோசையானும் வந்தமையால் வெண்பா. “இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே யாடமைத் தோழிக் கூடலு மணங்கே யரிமதர் மழைக்கணு மணங்கே திருநுதற் பொறித்த திலதமும் மணங்கே.” இஃது அளவடியானும் அகவலோசையானும் வந்தமையால் ஆசிரியப்பா. “அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி.” இது தரவு. அடிதாங்கு மளவன்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாய் காடென்றா ரக்காட்டுட் டுடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே. இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீந்த வுலவையாற் றுன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு ளன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே. கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலாற் றுன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு ளின்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே. இவை மூன்றுந்தாழிசை:- எனவாங்கு - தனிச்சொல். இனைநல முடைய கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற் |