பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே. இது சுரிதகம்:-இஃதளவடியானுந் துள்ளலோசையானும் வந்தமையாற் கலிப்பா. “சுறமறிவன துறையெல்லா மிறவீன்பன வில்லெல்லா மீன்றிரிவன கிடங்கெல்லாந் தேன்றாழ்வன பொழிலெல்லா மெனவாங்கு தண்பணை தழீஇய விருக்கை மண்கெழு நெடுமதின் மன்ன னூரே.” எனவும், “தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேற் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி யென்னலத்தகை யிதுவென்னென வெழில்காட்டிச் சொன்னலத்தொகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங் கென்னப் பெரிதும் கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ் சிலம்பிடைச் செலவுஞ் சேணிவந் தற்றே.” எனவும், இவை, குறளடிசிந்தடியானுந் தூங்கலோசையானும் வந்தமையால் வஞ்சிப்பா எனவரும். இனி வெண்பாவுக்கு வரலாறு:__ “அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே பெரிய வரைவயிரங் கொண்டு__தெரியிற் கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் பெரிய வரைவயிரங் கொண்டு.” இது காசெனமுடிந்தது. “உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து.” இது பிறப்பென முடிந்தது. “பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி வாலெயி றூறிய நீர்.” இது நாளென முடிந்தது. |