“பொன்னார மார்பில்”இது மலரெனமுடிந்தது. அடைவே காசு பிறப்பு நாண் மலரெனவும் ஈற்றடிமுச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க. இனி ‘பாலொடுதேன்’ எனவும், ‘உருவுகண்டெள்ளாமை’எனவும், ஒரு விகற்பத்தானும் இருவிகற்பத்தானும் வந்தமையாற் குறள்வெண்பா. “தடமண்டு தாமரையின் றாதா டலவ னிடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நடாயினா னூர்” எனவும், “அரிய வரைசீண்டு காட்டுவார் யாரே பெரிய வரைவயிரங் கொண்டு-தெரியிற் கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் பெரிய வரைவயிரங் கொண்டு” எனவும், இவை இரண்டு குறள் வெண்பா நடுவு முதற்றொடைக்கேற்ற தனிச் சொல்லாலடிநிரம்பி இரண்டு விகற்பத்தானு மொருவிகற்பத்தானும் வந்தமையால் இருகுறள் நேரிசைவெண்பா. “கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத் தருமமுந் தக்கார்க்கே செய்யா-வொருநிலையே முட்டின்று மூன்று முடியுமே லஃதென்ப பட்டினம் பெற்ற கலம்” எனவும், “வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானுமவன் வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ” எனவும், ஓரசையானும் ஈரசையானும் ஆசிட்டு இருவிகற்பத்தானும் ஒருவிகற்பத்தானும் வந்த இருகுறணேரிசை வெண்பா வந்தவாறு கண்டுகொள்க. இனி:- “வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாணாண்மேன் வைகுதல் வைகலை வைத்துணரா தார்.” இது, நான்கடியாய்த் தனிச்சொல்லின்றி யொருவிகற்பத்தால் வந்த இன்னிசைவெண்பா. “இன்னாமை வேண்டி னிரவெழுக விந்நிலத்து மன்னுதல் வேண்டி னிசைநடுக தன்னொடு |