றோற்றந் தொழில்வடிவு தம்முட் டடுமாற்றம் வேற்றுமை யின்றியே யொத்தன மாவேட ராற்றுக்கா லாட்டியர் கண்.” இஃது ஐந்தடியான்வந்த ஒரு விகற்பப் பஃறொடைவெண்பா. “பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவி லென்னொடு நின்றா ரிருவ ரவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக் கியானைநன் றென்றாளு மந்நிலையள் யானை யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன் றிருத்தார்கன் றென்றேன் றியேன்.” இஃது ஆறடியான் வந்த ஒரு விகற்பப் பஃறொடைவெண்பா. “வையக மெல்லாங் கழனியா வையகத்துச் செய்யசகமே நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின் சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட் டானேற்ற மான சருக்கரை மாமணியே யானேற்றான் கச்சி யகம்.” இது பல விகற்பத்தான் வந்த ஏழடிப்பஃறொடைவெண்பா:- (1) |