பக்கம் எண் :
 
22சிதம்பரப்பாட்டியல்

பெறாமலுமாம்;           “வெள்ளடிகுன்றாவாங்        கலிவெண்பா”
எ-து-வெள்ளடிக்குச்சொன்ன   இலக்கணங்களிற்  குறையாமல்  வருவது
கலிவெண்பா;             “நேரிசையின்னிசைபோன்     மூன்றடியேற்
கருதப்பேர்சிந்தியல்”       எ-து     -     நேரிசைவெண்பாப்போலத்
தனிச்சொற்பெற்றும்,   இன்னிசைவெண்பாப்போலத் தனிச்சொல்லின்றியும்,
மூன்றடியாய்வருமாயின்                         அவ்வப்பெயராலே
நேரிசைச்சிந்தியல்வெண்பாவென்றும்,    இன்னிசைச்சிந்தியல்  வெண்பா
வென்றும்  கொள்க.  “பெயர்  கருது”   என்பதனால், அவைபோல ஒரு
விகற்பமும்    பல   விகற்பமும்    கொள்க.   “ஒப்பீரடி   செந்துறை”
எ-து-இரண்டடியுந்     தம்முள்      ஒத்துவருவது    வெண்செந்துறை;
“ஈற்றிலகடிகுன்றுதல்   குறட்டாழிசை”    எ-து-பலசீரா  யீற்றடிகுறைந்து
வருவது  குறட்டாழிசை; இவ்விரண்டுங்;  குறட்பாவினம். “அடிமூன்றாய்ச்
சிந்தீற்றடியாய்   இறல்வெண்டாழிசை”   எ-து--மூன்றடியாய்  முடிவிலடி
முச்சீராய்    முடிவது    வெண்டாழிசை.   “அடிமூன்றீறேழ்   குலவடி
அந்தங்குறையும்   வெண்டுறை”  எ-து-மூன்றடி  முதலாய்  ஏழடியீறாய்
முடிவிலடி     குறைந்து     வருவது    வெண்டுறை.    “நான்கடியுங்
கொண்டடிகடொறுந்                 தனிச்சொல்           பரவல்
வெளிவிருத்தம்”எ-து--நான்கடியு     மூன்றடியும்பெற்று     அடிதோறு
மிறுதியொருசொல்     தனிச்சொல்லாய்வருவது        வெளிவிருத்தம்.
உம்மையான் மூன்றடியுங் கொள்ளப்பெற்றது.

உதாரணம்:-

“சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடு
மணற்சிற்றில் காலிற் சிதையா வடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நா
ளன்னையும் யானு மிருந்தேமா வில்லிரே
யுண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை
யடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழா
யுண்ணுநீ் ரூட்டிவா வென்றா ளெனயானுந்
தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்
டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா
வன்னை யலறிப் படர்தரத் தன்னையா
னுண்ணுநீர் விக்கினா னென்றேனா வன்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்
கடைக்கணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ்
செய்தானக் கள்வன் மகன்.”

என்னும்   பாட்டும்   மடல்போல்வனபிறவுந்  தனிச்சொல்லின்றி  வந்த
கலிவெண்பா:-