“வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியா-முட்கா தெதிரூனறல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி யதுவளைத்த லாகு முழிஞை-யதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார் செருவென் றதுவாகை யாம்” என்னும் பாட்டுமுதலாயின போல்வன பிறவுந் தனிச்சொற்பெற்று வந்த கலிவெண்பா:- “நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே-பொற்றேரான் பாலைநல் வாயின் மகள்” எனவும், “அறிந்தானை யேத்தி வறிவாங் கறிந்து செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச்--சிறந்தார் சிறந்தமை யாராய்ந்து கொண்டு” எனவும், இவை, மூன்றடியால் நேரிசை வெண்பாப்போல இரண்டாமடியினிறுதி தனிச்சொற் பெற்று இரு விகற்பத்தானும் ஒருவிகற்பத்தானும் வந்தமையால் நேரிசைச்சிந்தியல் வெண்பா. “நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டி ரடி” எனவும், “சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை.” எனவும், இவை, மூன்றடியால் இன்னிசைவெண்பாப்போற் றனிச்சொல்லின்றி ஒரு விகற்பத்தானும இருவிகற்பத்தானும் வந்தமையால் இன்னிசைச் சிந்தியல் வெண்பா. “முல்லை முறுவலித்துக் காட்டின மெல்லவே சேயிதழ்க் காந்த டுடுப்பீன்ற போயினார் திண்டேர் வரவுரைக்குங் கார்” இதுவும் பலவிகற்பத்தான்வந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா. “ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லா மோதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” எனவும், |