பக்கம் எண் :
 

14நவநீதப் பாட்டியல்

     பாட்டுடைத் தலைவன் இயற்பெயரெழுத்து ராசிக்கும் மங்கலச்சொல்
ராசி எட்டாம் ராசியாகில் அட்டம ராசி என்னும் குற்றமாம். பன்னிரண்டாம்
ராசி தோயநாசிகம என்னும் குற்றமாம். வைநாசிகம் என்பது பாட்டுடைத்
தலைவன் இயற்பெயரெழுத்து ராசிக்கு எண்பத்தெட்டாங்காலில் வரும் நாள்
எழுத்து. இவையெல்லாம் களைந்து பாட்டின் முதற்சீர் வைத்துக்கொள்க.

     (கு - ரை). பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்துக்குரிய
நட்சத்திரத்திலிருந்து செய்யுள் முதலெழுத்தின் நட்சத்திரம் வரையில்
எண்ணிவரும் தொகையை ஒன்பதால் வகுத்து எஞ்சிய எண்களுக்கு
இப்பொருத்தம் பார்க்க. இராசி: மேடம் முதலிய பன்னிரண்டு ராசிகள்.
அசுவனி, பரணி, கிருத்திகையின் முதல் கால் ஆக இரண்டேகால்
நட்சத்திரம் (நாள்) மேஷத்துக்குரியவை. இங்ஙனம் 27 நாட்களையும்
இரண்டேகால் இரண்டேகாலாகப் பன்னிரண்டு இராசிகளுக்கும் பகுத்திடுக.
அட்டம ராசி - எட்டாம் ராசிக்குரிய இரண்டேகால் நாள். (19)

 
கதிப் பொருத்தம்
   
20. வல்லினங் குற்றெழுத் தீறின்றி யேவரின் வானோர்கதி
மெல்லின மீறின்றி மேவு நெடின்முதல் 1நான்கும்வந்தால்
2சொல்லினர் மக்கட் கதியெனச் சொன்ன மொழிமுதற்கண்
புல்லு மெனினவை யெல்லாப் புலவரும் போற்றுவரே.

     (உரை - I) எ - ன், தேவகதியும் மக்கட் கதியும் ஆமாறு
உணர்த்..............று.

     (இ - ள்.) வல்லினத்து ஈறு நீங்கலான க, ச, ட, த, ப
என்னும்அஞ்செழுத்தும், குற்றெழுத்து ஈறுநீங்கலான அ, இ, உ, எ என்னும்
நான்கெழுத்தும் தெய்வ கதி. மெல்லினத்து ஈறு நீங்கலான ங, ஞ, ண, ந, ம
என்னும் அஞ்செழுத்தும், நெடின் முதலெழுத்தாகிய ஆ, ஈ, ஊ, ஏ என்னும்
நான்கெழுத்தும் மக்கட்கதி. இவ்விரு திறமும் எடுத்த மொழி முதற்கண் வரின்
அவை ஆம் எ - று.

     ஈண்டுச் சூத்திரம் செய்யவேண்டியது, இவை கடவுட் பிறந்தன, மக்கட்
பிறந்தன என்று அவையிற்றது சிறப்பும் சிறப்பின்மையும் உணர்த்துதற்கு.