|
கலம்பகத்தின்
செய்யுட்டொகை
|
|
|
35. |
தேவர்ககு
நூறு முனிவர்க் சிழிபைந்து 1சேணிலத்தைக்
காவற் குரிய வரசர்க்குத் தொண்ணூறு காவலரால்
ஏவற் 2றொழிலவற் கெண்ப தெழுப திருநிதியம்
மேவப் படுமவர்க் கைம்பது முப்பது மிக்கவர்க்கே. |
(உரை - I). எ-ன், வகுத்த கலம்பகம் வருமுறை வகுத்தது இது
என்பதுணர்த்...............று.
இவை அந்தாதி, மண்டலித்து முடியும் எனப்படும் எ-று.
அமராக்கு
நூறந் தணருக் கிழிவைந்
தரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம் பட்ட
முடிபுனையா மன்னர்க் கெண்பது
வணிநர்க் கெழுபது மற்றை யோர்க்குத்
துணியி லறுபத் தஞ்சு சொல்லும். |
இது முள்ளியார்
கவித்தொகை.
அந்தணர் அரசர்
வணிகர் வினைஞர்க்குத்
தொண்ணூ றெண்ப தெழுப தறுபது
விண்ணோர் தமக்கு நூறென விளம்பினர். |
என்பது கல்லாடம்.
அமரர்க்கு நூறந்
தணருக் கிழிவைந்
தரசக்குத் தொண்ணூ றன்றி முடிபுனையாப்
புதல்வாக கெண்பது புகலுங் காலே.
தானைத் தலைவர்க்கும் வணிகர்க்கும் எழுப
தேனை யோர்க்கிழி பிருபது பாட்டே. |
என்பவை மாமூலம்.
இக்கருத்துத் தொகை கொள்க.
(உரை
- II). எ - ன், தேவதைகளைப்பாடும் பிள்ளைத் தமிழ்க் கவி
நூறு பாடவும். பிராமணருக்குத் தொண்ணூற்றைந்து கவி பாடவும்.
முடிபுனைந்த மன்னருக்குத் தொண்ணூறு கவி பாடவும். வைசியர்க்கு எண்பது
கவி பாடவும். இதிற் கீழ்ப்பட்டவர்களுக்கு ஐம்பது, முப்பது பாடவும்.
இப்படிப் பிரபந்தம் பாடுவது;
(பி
- ம்.) 1 சேணிலத்துக் 2 றொழில்பெற்ற
மாந்தர்க்கெழுப
|