பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 29

     (கு - ரை). 33, 34, 35 ஆம் சூத்திரங்களிற் கூறிய பொருளை
யெல்லாம் பின்வரும் சூத்திரம் தழுவி நிற்கிறது;


“கலம்பக மென்ப தொருபோகு வெண்பா
கலித்துறை புயவகுப்பு மதங்கம் மானை
காலம் சம்பிரதம் கார்தவம் குறமறம்
பாண்களி சித்தோ டிரங்கல் கைக்கிளை
தூது வண்டு தழையூச லென்னுமிப்
பதினெட் டுறுப்பிவை யந்தாதித துறையால்
ஐவகைப் பாவு மினமும் பொருந்த
இமையோர்க்கு நூறு மந்தணர்க்குத் தொண்ணூற்
றைந்து மரசர்க் குத்தொண் ணூறும்
வைசியர்க் கைம்பதுஞ் சூத்திரர்க்கு முப்பதும்
ஆக மொழிவர் மூதுணர்ந் தோரே”

என்பது பிரபந்த தீபம்.


     மண்டலித்து முடிவது: பிரபந்தத்தின் ஈற்றுச் செய்யுளின் ஈறும்,
முதற்செய்யுளின் முதலும் ஓன்றாக அமைவது. (10)

மும்மணிக்கோவை, மும்மணி மாலை, நான்மணிமாலை
   
36. முன்னா சிரியம்பின் வெண்பாக் கலித்துறை முப்பதென்று
சொன்னார்கள் மும்மணிக் கோவைக்கு மும்மணி மாலை
                                    [சொல்லின்
அந்நான் மறைப்பாக் கலித்துறை யாசிரி யம்விருத்தம்
இந்நால் வகைச்செய்யு ணாற்பது நான்மணி
                                 மாலையென்னே.

     (உரை I). எ - ன், முன் ஆசிரியம் வந்து பின் வெண்பா வந்து பின்
கலித்துறை வந்து இவ்வாறே முப்பது பாட்டான் முடிவது மும்மணிக்
கோவையாம்; வெண்பா வந்து பின் கலித்துறை வந்து ஆசிரிய விருத்தம்
பின் வந்து முன்போலே முப்பதான் முடிவது மும்மணி மாலையாம்; வெண்பா
வந்து பின் ஆசிரியம் வந்து பின் விருத்தம் வந்து பின் கலித்துறை வந்து
இவ்வாறே நாற்பது பாட்டான் முடிவது நான்மணி மாலையாம் எ - று.

“ஆசிரியம் வெண்பாக் கலித்துறை முப்ப
தாக வருவது மும்மணிக் கோவை.”