பக்கம் எண் :
 

30நவநீதப் பாட்டியல்

“வெள்ளைக்களித்துறை யாசிரிய விருத்தம்
புல்லும் முப்பதும் மும்மணி மாலை.”
“வெண்பா வாசிரியம் விருத்தம் கலித்துறை
ஒண்பா நான்கும் நான்மணி மாலை.”
 
- செய்யுள் வகைமை

     இவை எல்லாம் அந்தாதியாக மண்டலித்து முடிவன.

    
(உரை II). .....................ஆசிரியப்பாவும் வெண்பாவும் கலித்துறையும்
ஆசிரிய விருத்தமும் மாறி மாறி வந்து அந்தாதியாக நாற்பது பாட்டால்
முடிவது நான்மணி மாலையென்று வழங்கப்படும் எ - று.

    (கு - ரை.) நான்மறைப்பா - அந்தணர்க்குரிய வெண்பா;
பாக்களுக்குரிய சாதிகளை 81-ஆம் சூத்திரத்திற் காணலாம். சில
பிரபந்தங்களில் இந்த முறை பிறழ்ந்தும் வரும். (11)


 
இலுபஇருபா இருபது, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை
 
37. இருபா விருபது வெண்பா வகவல் இரட்டைமணி
தருபா விருபது வெண்பாக் கலித்துறை தாமிவையாம்
வருபா விரண்டிரண் டாத்தம்முண் மாறின்றி நூறுவரிற்
பொருமான் விழியா யிணைமணி மாலை புகல்வர்களே.

     (உரை I). எ - ன், இருபா இருபது, இரட்டைமணி மாலை, இணைமணி
மாலை ஆமாறுணர்த்....................று.

     (இ - ள்.) வெண்பா வந்து பின் ஆசிரியப்பாவும் வந்து இருபது
பாட்டான் முடிவது இருபா இருபதாம். வெண்பாவும் அதன் பின்
கலித்துறையும் வந்து இருபது பாட்டான் முடிவது இரட்டைமணி மாலையாம்.
வெண்பா இரண்டு வந்து பின் இரண்டு கலித்துறை வந்து நூறு பாட்டான்
முடிவது இணைமணி மாலையாம்.

     வெண்பா என்பது செய்யுட்களுக்குப் பொது.

     (உரை II)...................வெண்பாவும் அகவலும் மாறி மாறி நூறு பாடுவது
இணைமணி மாலையென்று சொல்லப்படும் எ - று.

     (கு - ரை.) இருபா-முதலிருபாவாகிய வெண்பா அகவல், நேரிசை
வெண்பாவும் ஆசிரிய விருத்தமும் தம்முள்மாறி இருபது பாட்டாய் முடி