பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 31

வதும் இரட்டை மணிமாலையாம்; “இரட்டைமணிமாலை இயம்புங் காலை,
வெண்பா கலித்துறை விரவிப் பப்பத்தும், நேரிசை வெண்பா ஆசிரிய
விருத்தம் இவற்றா மிருபதந் தாதித் தியம்பலே” (பிரபந்ததீபம், 8.) இதில்
உள்ள பிரபந்தங்கள் எல்லாவற்றிற்கும் வெண்பா வருதல் பொதுவானது
என்பதை, ‘செய்யுட்களுக்குப் பொது’ என்றார். (12)


பல்சந்தமாலை, வெண்பாவந்தாதி, கலித்துறையந்தாதி,
தொகை வெண்பா
   
38. +பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையந் தாதிவெண்பா
வைத்தார்க ணூறு கலித்துறை தன்னையும் மற்றவெண்பா
ஒத்தான வைம்ப தெழுபது தொண்ணூறும் பேர்பெற்றதாய்
இத்தா ரணியிற் புலவரெல் லாரும் இயம்புவரே.

     (உரை I).
எ - ன், பல்சந்த மாலையும் வெண்பா வந்தாதியும்
கலித்துறை யந்தாதியும் முத்தொகை வெண்பாக்களும் ஆமாறு உணர்த்...........று.

     (இ - ள்). பல சந்தங்களும் பத்து முதல் நூறளவும் வருவது பல்சந்த
மாலையாம்; வெண்பா நூறுவரின் வெண்பாவந்தாதி; கலித்துறை நூறு வரின்
கலித்துறை யந்தாதி; வெண்பா ஐம்பதானும் எழுபதானும் தொண்ணூறானும்
வந்தாற் பேர் பெற்று முடிவது அந்தத் தொகை வெண்பாவாம் எ - று.

     சந்தமென்பது நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத் தளவும்
ஒரோவடியான் ஒத்து வருவது.

     வெண்பாவென்பது ஆசிடை நேரிசை வெண்பா; கலித்துறை யென்பது
கட்டளைக் கலித்துறை. தொண்ணூறு மென்ற உம்மையான் தொள்ளாயிரமும்
பிறவுமாய் வரும்.

“சந்தத் தொருபது பல்சந்த மாலை
அந்த வெள்ளை ஐம்பதான் எழுபதான்
என்கஊர்ப் பேரோ டுறுமா வியல்பே
அகவறனையு மவ்வழி வரையார்”

என்பது முள்ளியார் கவித்தொகை; ஆகலின் ஆசிரியங்களும் இவ்வாறு
வருக வெனக்கொள்க. இன்னிசை வெண்பாக்களும் (ஐம்பதும்) எழுபதும்
தொண்ணூறுமாய் வருவன அறிந்துகொள்க.