காலாத்தாற் றொக்கன
கார்நாற்பது, பருவமாலை முதலியன. தொழிலாற்
றொக்கன ஊசல், ஊடன்மாலை, கூடன்மாலை போல்வன. பாட்டாற்
றொக்கன கலித்தொகை, பரிபாடல் போல்வன. அளவாற் றொக்கன
குறுந்தொகை, நெடுந்தொகை, நாலடியார் போல்வன.
இவற்றுள், அளவென்றது பாட்டின் அடியளவு ; எண்ணென்றது
நூலுள்
அடங்கியுள்ள பாட்டுக்களின் கணக்கு.
ஒரோவொருநூல் மேற்கூறிய பொருள் இடம் காலம் முதலியவற்றுள்
இரண்டினாற் றொக்கு வருதலும் கொள்க, உ-ம். அகநானூறு : இது
பொருளானும் எண்ணாலும் தொக்கது : செருக்களவஞ்சி : இஃது இடத்தானும்
பாட்டானும் தொக்கது.
இவையேயன்றி மிகுதியானும் தன்மையானும் முதனூலானும்,
இடுகுறியானும் உறுப்பினானும் பிறவாற்றானும் பெயர் பெறுவனவும் உள.
(பி - ம்).
1 டளவுமெண்ணி 2 தொகுப்பவுந் தேவர்க்கும்
மானிடரானவர்க்கும், கூட்டித் தொகுப்பவுஞ் செய்தொழி லாயவை
கூட்டலாகக் (41)
|
சித்திரச்
செய்யுளுக்கு ஆவதோர் நெறி
|
|
|
67. |
சக்கர
மேமுதற் சித்திரச் செய்யுள் தசாங்கங்களை
அக்கரக் கூறு படுப்பினு மானந்தம் அல்லவற்றின்
இக்குண மில்லாமை யானவை சொன்ன இவையுமன்றி
மிக்குள யாவு மிமையோர்க் சிலக்கு விலக்கிலவே. |
(உரை
I). எ - ன், சித்திரச் செய்யுள் திறத்துப்படும் இக்குணமும்
புகற்றமும் முறைமையும் உணர்த்..................று.
(இ - ள்.)
சக்கரமும், சுழிகுளமும், ஏகபாதமும் எழு கூற்றிருக்கையும்,
காதை கரப்பும், கரந்துறை பாட்டும், தூசங்கொளலும், வாவல் நாற்றியும், கூட
சதுக்கமும், கோமூத்திரியும், ஒற்றுப் பெயர்த்தலும், ஒருபொருட் பாட்டும்,
சித்திரக் காதையும், விசித்திரப்பாவும், விகற்பநடையும், வினாவுத்தரமும்,
சருப்பதோபத்திரமும், சார்ந்தவெழுத்து வருத்தனமும், நாகபந்தமும்,
முரசபந்தமும், விதான வருக்கமும், முந்திரியார் வஞ்சின
(மும்) முதலாம்
சித்திரச் செய்யுள் செய்யுங்கால் தலைவனது, தசாங்கங்களின் எழுத்துக்களைப்
பிரித்து நிறுத்திப்
|
|
|