புணர்ப்பானாகில் ஆனந்தமாம்.
அந்நெறியல்லன மானிடவரைப் புணர்த்தலாகா.
அல்ல நெறியும் இமையோர்க்காகின் ஆம் எ - று.
“மானிடர் தம்மைக்
கலிப்பாப் பாடலும்
தாழ்குழ லாரைத் தனிவெண்பாப் பாடலும்
.............முன்பொரு ளுணந்திசி னோரே” |
என்பது மாமூலம்.
(உரை II).
இவ்வகைப்பட்ட செய்யுளெல்லாம் பாடுமிடத்துத்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் முடிபுனைந்த மன்னர்க்கும் பாடலாம்.
அல்லாதவர்களுக்குப் பாடலாகாது. பாடில் பாடுவித்துக்கொண்ட
தலைமகனுக்கு அர்த்த நாசமும் புத்திர நாசமும் பிராண நாசமும் வரும்.
பாடிய புலவனுக்குச் சொல்லானந்தத்தினாலே அடாத வியாதி யடுத்து அவன்
குட்டநோய் கொண்டு காலும் கையுங் குறைந்து மரிப்பான். மறுமைக்கு
நரகத்து அழுந்துவன். அதனால் சாதிக்குத் தக்க செய்யுளறிந்து பாடவும்,
‘அடாது பாடிற் படாதுபடும்’ என்றாராகலின். (42)
|
இசைச்செய்யுட்
டிறம், இவ்வியலுக்குப் புறநடை
|
|
|
68. |
பாவா
னவையிசை தம்மிற் பயிறலப் பாவினத்தில்
தாவாத வெண்செந் துறைசந்தந் தாண்டகம் 1தாமனைத்தும்
மேவாத வல்ல வினைப்பாத் தமிழ்2 வெற்பின் வேதமுனி
நாவார் 3தமிழ்நடைக் கேபுணர்த் திக்கொள்க நன்னுதலே. |
(உரை
I) எ - ன், இசையுடன் வரும் செய்யுட்டிறமும்
இவ்வோத்திற்குப் புறநடையும் ஆமாறு உணர்த்.....று.
(இ - ள்),
பா நான்கும் இசையொடு பயின்று, பாவினங்களுள்ளும்
வெண்செந்துறைமேல் சந்தமும் தாண்டகங்களும் பயின்று வருவனவாம்.
வண்ணத் துறையாக நின்ற செய்யுள் மேல் வரும் பொருட்டிறம் உள்ளனவும்
பிறவும் திருமுது பொதியிற் றெய்வ முனிவர் அருளிய பாவியல்களும்
பாட்டியல்களும் வந்தனவெல்லாம் முறையே அறிந்து கொள்க எ - று.
|