பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 57

“சந்தம் தாண்டகம் வெள்ளைச் செந்துறை
இன்னவை யின்றி யமைந்த விசைத்திறம்
எல்லாம் பாவினத் தியன்ற வன்றே”

என்பது மாமூலம்.

“இசையினுட் பாக்க ளியலா வாயின்
இசைத லிற்றென வுரைக்கவும் படுமே”

என்பது செய்யுள் வகைமை.

    
அஃதேல் கவிப்பாவெல்லாம் தேவபாணியென இசையோடு
புணர்ப்பரன்றோவெனின், அவை இன்று வேண்டாத ஆசிரியப்பாட்டாக்கி
உரைக்கும் எ - று.

     (பி - ம்) 1 ‘தாமமைந்த’ 2 ‘வெற்புடன் வேதமுள்ள’ 3 ‘தமிழ்நடை
தன்னை யுணர்ந்துகொள்’ (43)

 செய்யுண் மொழியியல் முற்றும்

ஆகக் காரிகை 71.