பக்கம் எண் :
 

பொது மொழியியல் 59

சிறப்புப்பாயிர இலக்கணம
   
70. +செய்தான் செயப்பட் டதுசெய் பொருளது செய்திறத்தோ
டெய்தும் பயனின்ன தன்வழி யெல்லை எனவொரெட்டும்
ஐயமில் கால மவைகா ரணமாகப் பத்தொடொன்றும்
மெய்தெரி யிற்சிறப் புப்பா யிரமென்ன வேண்டுவரே.

     (உரை I)
எ - ன், நூற்கருவிப் பொருளும், அது தொகுத்தல்
விரித்தல் தொகைவிரி யென்னும் செய்திறமும், கேட்போரும், பயனும்,
இன்னதன் வழித்து என்றலும், இன்ன எல்லையுள் நடக்கும் என்றலும்,
மேலொருசார் இன்ன காலத்து இன்னான் அவைக்கண் இன்ன காரணமாக
என்னும் மூன்றுடனாகப் பதினொன்றும் என்பவையிற்றை உரைத்தல் சிறப்புப்
பாயிரமாம் எ - று.

“வருவது மொழிதல் கடவுளை யேத்துதல்
....சிறப்புப் பாயிர மென்ப.”

இப்படிச் சொல்லும் ஒரு சாரார் கருத்தும் அறிக.

     (கு - ரை). இச்சூத்திரமும் அடுத்த சூத்திரமும் ஒரு பொருளன.
காலம், அவை, காரணம்; அவை-நூல் அரங்கேற்றப் பட்ட சபை. (2)

இதுவுமது
   
71. நூற்பெயர் நூல்செய்த வாசிரி யன்பெயர் நூல்விளங்கித்
தோற்றிடச் செய்தற்குக் காரணம் 1யாப்புத்தொன் னூலின்வழி
பாற்படு மெல்லை யறிதற் பயனிவை யுஞ்சிறப்பின்
மேற்படு பாயிர மென்றா சிரியர்கள் வேண்டுவரே.

     (உரை I). எ - ன், வடநூல்வழிச் சிறப்புப்பாயிரம் உணர்த்.......................று.

     (இ - ள்.) நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும், நூல் செய்தற்குக்
காரணமும், வடநூல் வழி எழுத்தும், வரைவாகிய பயனும் இவை ஐந்து
காரியமும் சிறப்புப்பாயிரம் என்பர் ஒரு சாராசிரியர் எ - று.

     (உரை II). எ - து, யாதானுமொரு நூலுரைக்கவேண்டுமிடத்தில்
நூற்பெயரும், காரணமும் ஆக்கியோன் பெயரும் யாப்பும் வழியும் அளவும்
பயனும் உரைப்பது சிறப்புப்பாயிரம் என்று சொல்லுவர் புலவர் எ - று