பக்கம் எண் :
 

பொது மொழியியல் 61

     சூத்திரம் ஆறுவகைப்படும் (பெயர்ச்சூத்திரம், விதிச் சூத்திரம்)
விலக்கியற்சூத்திரம், (நியமச்சூத்திரம்) அதிகாரச்சூத்திரம், (ஞாபகச்சூத்திரம்)
இவையும் தந்திரவுத்தியுள்ளேயடங்கும் எ - று.

     ஒருசார் ஓர்புடைப் பொருளெல்லாம் தோற்றச் சூத்திரம் நடத்தலிற்
சூத்திரம் ஆறுவகைப்படும் என்பதாம்.

அவைதாம்:


.............................................................................
“வெண்பா வகவல் அல்லன பிறவும்
வெள்ளைக் குறட்சிறப் பல்லன வரையார்.”

“ஓரடி முதலாப் பொருண்முடி வரையாம்
பிறர் நூற் காட்டினும் வரையா ராண்டே,”

“வஞ்சியும் கலியும் வரையல் வேண்டும்.”
“உரை யெனப் படுவ துணருங் காலைக்
கருத்தே கண்ணழிவு தாரணம் பொழிபொருள்
அகலம் நுட்பமென் றாங்ஙன முடிய
உணர்த்தும் சொல்வகுத் துரைத்தபின்
எழுத்தெழுத் தாகப் பொருள் தெரிந்து
சூத்திரம் படலம் பிண்டமென் றவற்றான்
யாப்புற வகுத்த நூற்பொருள் வழாமை
நோக்கொடு மாறுகோள் ஏற்புழி யறிந்து
முதல்நடு விறுதி உரைமாறு படாமை
நிரல்நிறை சுண்ணம் அடிமறி யாற்றொழுக்
களைமறி பாப்புவிற் பூட்டுத் தாப்பிசை
கொண்டுகூட் டாகிய வகையால்
ஏற்பக் கூறல் உரையெனப் படுமே.”

“வடமொழி கூட்டினும் வரையா ராண்டே.”

“................ ................. .............. ................
வேற்றோர் மதமேற்கொண்டு களைதல்
தாஅ னாட்டித் தனாஅது நிறுத்தல்
இருவர் மாறுகொண் டொருதலை துணிதல்
பிறர் நூற் குற்றங் காட்டல் (ஏனைப்)
பிறிதுடன் படாமே தன்மதம் வகுத்தல்.”