பக்கம் எண் :
 

பொது மொழியியல் 63

..........உரைத்து மென்றல்
விகற்பித்து முடித்தல் தொடுத்துடன் முடித்தல்
ஒருதலை துணிதல் உய்த்துணர வைத்தல்
உரையிற் கோடல் ............”

எனவிவை.

     (உரை II). எ - து, முதல்நூல் வழிநூல் சார்புநூல் என்று
சொல்லப்பட்ட மூவகை நூலினாலும் எழுவகை ஆசிரிய மதத்தினாலும்
பத்துவகைக் குற்றம் தீர்ந்த குணத்தினாலும் ............ உரைவிகற்பத்தினாலும்
........ முப்பத்திரண்டு வகைத் தந்திர வுத்தியினாலும் வகுத்து ஏதுவும்
மேற்கோளும் எடுத்துக் காட்டும் மூதுரையுங் கூட்டிப் பெரியோரால்
உரைக்கப்பட்டது பெருநூற்கிளவி என்ற பெயரதாம் எ - று.

     (கு - ரை). இங்கே வந்துள்ள மேற்கோட் சூத்திரங்களுட் சில
நன்னூலுள சிறிது வேறுபாட்டுடன் காணப்படுகின்றன.

     உரை I - ல் ‘தந்திரம் சூத்திரம் விருத்தி என்னும் மூன்றும்’ என்று
பொருள் கொண்டது எதிர்நூலைக் கூட்டிக்கொண்டமையான் என்க.
மூவகைத் தந்திரமும் சூத்திரமும் விருத்தியும் என்று பொருள் கொள்ளின்
எதிர்நூல் என்றதொன்று இங்கே இடம் பெறாமற் போதலைக் காண்க.

     தந்திரம் - நூல், சூத்திரம் - மூலபாடம், எதிர்நூல் ஒன்றுண்டென்பது
யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றால் தெரிகிறது. கண்ணழிபு - பதத்சேதம்.
பொழிபொருள் - பொழிப்புரை. அகலம் - விருத்தியுரை. ‘நிரல்நிறை,
சுண்ணம் .... கொண்டுகூட்டு’ இவை பொருள் கோள் : இவற்றின்
இலக்கணங்களை யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி முதலிய
நூல்களிற் காண்க.

     (பி - ம்). 1 ‘சார்பெதிர்’ 2 ‘விருத்தியோ டேது மேற்கோ ளுரைநான்’
3 ‘நூல்வகையே’ (4)

அந்தணர் இயல்பு
   
73. கோல்குடை கோவணம் நான்மறை முத்தீக் குசைதருப்பை
மால்கழல் வாழ்த்த 1லிரண்டு பிறப்பு மணைசமிதை
தோலைந்து வேள்வி கரக மரவிந்தம் தொல்கோத்திரம்
நூலிரு மூன்றங்க மந்தணர்க் கோதுவர் நூலவரே.