(உரை
I). எ - ன், மறையோர்க்குரிய இவை வாழ்த்தினுள் உரைப்ப
என்பது உணர்த்...........................று.
(இ - ள்.)
தண்டும் குடையும் கோவணமும் நான்மறையும் முத்தீயும்
குசையும் தருப்பையும் திருமாலைப் போற்றுதலும் இரண்டு பிறப்பும்
மணையும் சமிதையும் மான்தோலும் கமண்டலமும் ஐவகை வேள்வியும்
அரவிந்தத்தாரும் கோத்திரமும் பூணூலும் ஆறு அங்கமும் என இவை
பதினெண் வகையும் பார்ப்பார் இயல் பென்று அவரை வழுத்தும் செய்யுள்
இயல்க எ - று.
அரசர்க்
காயினு மந்தண ரொழுக்கமோ
டியலு மாயி னவ்வகைக் குரிய |
என்பது பருணர்
பாட்டியல்.
(உரை
II). எ-து, பிராமணர்க்குத் தண்டு கமண்டலமும் குடையும்
தர்ப்பையும் மூவகை அக்கினியும் ஐவகை வேள்வியும் ஆறங்கமும்
நவதீர்த்தமாடுதலும் பசுவுக்கு வாயுறை கொடுத்தலும் அதிதிபுசிப்புக்
கொடுத்தலும் காலசந்தியும் மத்தியான சந்தியும் அத்தமன சந்தியும்
இக்காரணமாகக் கடன் கழித்து இந்த அடைவின் நெறி நடத்துவது
கருமமாம். எ று.
(கு-ரை).
முத்தீ-மூன்று தீ; அவை ஆகவனீயம், காருக பத்தியம்,
தக்கிணாக்கினி குசை வேறு-தருப்பை வேறு. இரண்டு பிறப்பு-உபநயனச்
சடங்கை மறுபிறப்பென்பது நூல்வழக்கு; முத்தீச் செல் வத்திருபிறப் பாளர்
(முருகு, 181 - 2.)
ஐந்துவேள்வி; தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்
தோர் மனித்தர்,
ஐவகை யோரை யோம்பல் ஐவகை வேள்வியாமே (சூடா. பல்பெயர்த்.
44.)
அரவிந்த மாலை அந்தணர்க்கு உரியது; (பெரும்பாண்.
289-90, உரை (5)
(பி - ம்).
1 லொருமுப் பொழுது வனம்படிதல், ஏலும் பசுவுக்குப்
புல்லீத லைந்துயர் யாகஞ்செய்தல்
|